
இந்தியாவில் ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியின் அடுத்த மாடலாக X440T என பெயரிடப்பட்டு சற்று ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்று மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டதாக அறிமுகம் செயப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு அனேகமாக அடுத்த சில வாரங்களில் ரூ.2.45 லட்சத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.
அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்கள் ஏற்கனவே சந்தையில் உள்ள X440 தழுவியதாகவும் சிறிய அளவிலான சஸ்பென்ஷன் மேம்பாடு, நவீனத்துவமான ரைட் பை வயர் நுட்பத்தை பெற வாய்ப்புள்ளது.
Harley-Davidson X 440T
அடிப்படையான முன்பக்க டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் டூரீங் பைக்கினை போல அமைந்துள்ள புதிய எக்ஸ் 440 டி மாடலின் பின்புறத்தில் சக்கரம் மற்றும் ஃபெண்டருக்கு இடையில் அதிக இடைவெளி குறைக்கப்பட்ட புதிய 440T மாடலின் பின்பகுதி மிகவும் நேர்த்தியாகவும், ஸ்போர்ட்டியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடிகள்: ஹேண்டில்பாரின் நுனியில் பொருத்தப்பட்ட பார்-எண்ட் மிரர்கள் கூடுதலான ஸ்போர்ட்டியான லுக்கை தருகிறது. சிவப்பு, நீலம், ப்ளூ மற்றும் வெள்ளை என நான்கு நிறங்களை தழுவிய புதிய வண்ணங்களில் வெளிவரவுள்ளது.
மற்றபடி, ரைட் பை வயருடன் கூடிய 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வெளிப்படுத்தும், இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

3.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டு நிகழ் நேரத்தில் எரிபொருள் இருப்பு, ரேஞ்ச் டிஸ்ப்ளே, கியர் பொசிஷன் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், டர்ன் இன்டிகேஷன், ஹை பீம் இன்டிகேட்டர், ஏபிஎஸ் அலர்ட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், சர்வீஸ் இன்டிகேஷன், குறைந்த எரிபொருள் எச்சரிக்கை, நியூட்ரல் பொசிஷன் இன்டிகேட்டர் ஆகியவற்றை பெறக்கூடும்.
முன்பக்கத்தில் 43mm அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெறுகிறது. இதில் ப்ரீ-லோடு அட்ஜெட்மென்ட் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 18 அங்குல சக்கரம் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்றுள்ளது. 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
புதிய ஹார்லி-டேவிட்சன் X440 T ரெட்ரோ லுக்கில் சிறந்த ஸ்போர்டிவ் தேர்வாக பட்ஜெட் விலை ஹார்லி மாடலாகவும் விலை ரூ.2.45 லட்சத்துக்கும் கூடுதலாக துவங்கலாம்.







