Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 பிஎஸ் 4 என்ஜினுடன் அறிமுகம்

by MR.Durai
28 December 2016, 8:32 am
in Bike News
0
ShareTweetSend

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 பைக்கில் புதிய வண்ணம் , ஆட்டோமேட்டிக் ஹேட்லேம்ப் மற்றும் பிஎஸ்4 மாசு விதிகளுக்கு ஏற்ற தரத்துடன் மேம்பட்ட என்ஜின் பொருத்தப்பட்ட யூனிகார்ன் 160 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வருகின்ற ஏப்ரல் 2017 முதல் நடைமுறைக்கு வரவுள்ள பிஎஸ்4 மோட்டார் சைக்கிள் மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாசு உமிழ்வினை வெளிப்படுத்தும் என்ஜின்களை கொண்ட மாடல்களை அனைத்து இந்திய மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர்களும்  அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் பல நிறுவனங்களின் மாடல்களில் பிஎஸ்4 என்ஜின்கள் இடம்பெற தொடங்கியுள்ளது. மேலும் மற்றொரு முக்கிய பாதுகாப்பு சார்ந்த அம்சமாக விளங்கும் தானியங்கி முறையில் இயங்கும் பாதுகாப்பு விளக்குகளும் பொருத்தப்பட உள்ளது.

புதிய சிபி யூனிகார்ன் 160

வெளியிடப்பட்டுள்ள ஹோண்டா யூனிகான் 160 பைக்கில் 162.71 cc, 4 ஸ்ட்ரோக் காற்று மூலம் குளிர்விக்கும் என்ஜினை பெற்று 13.82 குதிரைசக்தி வெளிப்படுத்தி 13.92 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகின்றது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 106 கிமீ ஆகும்.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.  முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 130மிமீ டிரம் பிரேக்கினை பெற்று சிபிஎஸ் எனப்படும் காம்பி பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் வின்ட்ஷில்டு வைசரில் சிறிய மாற்றத்துடன் ,  ஆட்டோமேட்டிக் ஹேட்லேம்ப் ஆன் வசதியுடன் புதிய நீலம் வண்ணத்துடன் வந்துள்ளது. முந்தைய வண்ணங்களான கருப்பு , வெள்ளை , சிவப்பு மற்றும் கிரே வண்ணங்களிலும் கிடைக்கும்.

ஹோண்டா யூனிகார்ன் 160 விலை

CB UNICORN-160 CBS – ரூ. 88,044

CB UNICORN-160 STD – ரூ. 85,317

(சென்னை ஆன்ரோடு விலை)

Related Motor News

புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை

28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்

2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் CBR250R விலை உயர்ந்தது

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் நீக்கப்படவில்லை

ஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு

Tags: Honda Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 yamaha r15 v4 bike on road price

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan