Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் இந்தியா வருகை விபரம்

By MR.Durai
Last updated: 31,December 2016
Share
SHARE

இந்தியாவில் புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரின் பவர்ஃபுல்லான ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மாருதி ஸ்விஃப்ட் கார் அக்டோபர் 2017ல் விற்பனைக்கு வரலாம்.

வளர்ந்து வரும் இந்திய வாகன சந்தையில் சக்திமிக்க கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகின்ற நிலையில் பவர்ஃபுல்லலான முதல் காராக மாருதி நிறுவனம் பலேனோ ஆர்எஸ் மாடலை வருகின்ற பிப்ரவரி 2017ல் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதனை தொடர்ந்து ஸ்விஃப்ட்  ஸ்போர்ட் மாடல் சந்தைக்கு வரவுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் கார்

ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள சுசூகி ஸ்விஃப்ட் காரின் தோற்ற அமைப்பு முற்றிலும் மேப்படுத்தப்பட்டு ஸ்டைலிசான அம்சங்களுடன் விளங்குகின்றது. இன்டிரியர் அமைப்பிலும் புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் . ஆண்ட்ராய்டு ஆட்டோ , ஆப்பிள் கார்பிளே வசதிகள் , நேவிகேஷன் , யூஎஸ்பி , புளூடூத் என பலவற்றை பெற்றுள்ளது.  இந்திய சந்தையில் மாருதி ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3லிட்டர்டீசல் அல்லது புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் கூடுதலாக கிடைக்கும்.

பலேனோ காரில் இடம்பெற உள்ள 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜினுக்கு மாற்றாக பொருத்தப்பட உள்ள 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 140 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனையில் உள்ள அபாரத் புன்ட்டோ மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஜிடிஐ மாடல்களுக்கு கடுமையான சவாலாக மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தகவல் உதவி – autocarindia

tata winger plus
9-சீட்டர் விங்கர் பிளஸ் வேனை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்
2022க்கு முந்தைய ரெனால்ட் வாகனங்கள் E20 பெட்ரோலுக்கு ஏற்றதல்ல.!
350cc+ மோட்டார்சைக்கிள்களுக்கு 40 % ஜிஎஸ்டி வரி.?
நியோ ஹைரேஞ்ச் எலக்ட்ரிக் ஆட்டோரிக்‌ஷாவை வெளியிட்ட ஆய்லர் மோட்டார்
வரவிருக்கும் டிவிஎஸ் மோட்டாரின் மூன்று இருசக்கர வாகனங்கள் விவரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
2025 Royal Enfield bullet 350 logo
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms