Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

by MR.Durai
6 January 2025, 11:16 am
in Honda Bikes
0
ShareTweetSend

sp160  நீக்கப்பட்டு புதிய எஸ்பி 160 வெளியானது

honda sp160 bike on-road price

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய எஸ்பி 160 பைக் மாடலின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2024 Honda SP 160

விற்பனையில் கிடைத்து வந்த எக்ஸ்பிளேடு நீக்கப்பட்டு வந்துள்ள புதிய SP160 பைக் மாடலானது முன்பாக விற்பனையில் உள்ள 125சிசி எஸ்பி 125 பைக்கின் வடிவமைப்பினை பின்பற்றி யூனிகார்ன் 160 பைக்கின் என்ஜின் மற்றும் ஃபிரேம் உள்ளிட்ட அம்சங்களை பகிர்ந்து கொண்டு ஸ்போர்ட்டிவான தோற்ற வடிவமைப்பினை கொண்டுள்ளது.

யூனிகார்ன் 160 பைக்கில் பொருத்தப்பட்டுள்ள OBD2 மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

17 அங்குல வீல் பெற்று இருபக்க டயர்களிலும் 276 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்றதாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக இரு விதமான வேரியண்ட் கொண்டுள்ளது.

எஸ்பி125 மாடலை போன்ற எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில்லைட் பெற்றதாக எஸ்பி 160 விளங்குகிறது. முன்பக்கத்தில் 80/100-17M/C 46P மற்றும் பின்புறத்தில் 130/70-17M/C 62P டயர் பெற்றுள்ளது.

2024 எஸ்பி 160 பைக் மாடலின் பரிமாணங்கள் 2,061 மிமீ நீளம், 786 மிமீ அகலம் மற்றும் 1,113 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,347 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 796 மிமீ மற்றும் 177 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது.

எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், டேக்கோமீட்டர் மற்றும் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் கூடுதலாக, எரிபொருள் இருப்பினை கொண்டு பயணிக்கின்ற தொலைவு மற்றும் எரிபொருள் நுகர்வு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

2023 ஹோண்டா எஸ்பி160 பைக்கின் விலை

SP160 Single Disc – ₹.1,17,950

SP160 Dual Disc – ₹ 1,22,350

(எக்ஸ்-ஷோரூம் ) தமிழ்நாட்டின் விலை

honda sp 160 tail light

ஹோண்டா எஸ்பி 160 நுட்பவிபரங்கள்

என்ஜின்
வகை ஏர் ஆயில் கூல்டு, 4 stroke
Bore & Stroke 57.300 mm x 63.096 mm
Displacement (cc) 162.71 cc
Compression ratio 10:01
அதிகபட்ச பவர் 13.27 hp (9.9Kw) at 7500 rpm
அதிகபட்ச டார்க் 14.58 Nm  at 5500 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டைமண்ட் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 5 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்
பின்பக்கம் மோனோ ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிஸ்க் 276 mm (ABS)
பின்புறம் டிஸ்க் 220 mm / 130 mm டிரம்
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 80/100-17M/C 46P ட்யூப்லெஸ்
பின்புற டயர் 130/70-17M/C 62P ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V 4.0Ah MF
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 2061 mm
அகலம் 766 mm
உயரம் 1113 mm
வீல்பேஸ் 1347 mm
இருக்கை உயரம் 796 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 177 mm
எரிபொருள் கொள்ளளவு 12 litres
எடை (Kerb) 139 kg (Drum) / 141 Kg (Disc)

 

ஹோண்டா எஸ்பி 160 நிறங்கள்

ஹோண்டாவின் எஸ்பி160 மாடலில் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் டார்க் ப்ளூ மெட்டாலிக், பேர்ல் ஸ்பார்டன் ரெட், பேர்ல் இக்னியஸ் பிளாக் மற்றும் பேர்ல் கிரவுண்ட் கிரே என 6 விதமான நிறங்கள் பெற்றுள்ளது.

honda sp 160 Pearl Igneous Black
honda sp 160 Matte Marvel Blue Metallic
honda sp 160 Matte Axis Grey Metallic
honda sp 160 Pearl Deep Ground
honda sp 160 Pearl Spartan Red
honda sp160 price

Honda SP 160 on-Road Price Tamil Nadu

2024 ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

SP160 Single Disc – ₹.1,46,964

SP160 Dual Disc – ₹ 1,52,456

(All Prices on-road Tamil Nadu)

Related Motor News

2025 சுசூகி ஜிக்ஸர் 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா SP160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ரூ.1.19 லட்சத்தில் 2025 ஹோண்டா யூனிகார்ன் 160 விற்பனைக்கு வெளியானது..!

ரூ.1.22 லட்சத்தில் 2025 ஹோண்டா SP160 விற்பனைக்கு அறிமுகமானது..!

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 2V விற்பனைக்கு வெளியானது

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியல்

SP160 Single Disc – ₹.1,32,657

SP160 Dual Disc – ₹ 1,36,751

(All Prices on-road Pondicherry)

2024 Honda SP160 Rivals

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற யமஹா FZS-Fi V4 Dlx, சுசூகி ஜிக்ஸர், பல்சர் NS160, பல்சர் N160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.

Faqs About Honda SP 160 Bike

ஹோண்டா SP 160 பைக்கின் என்ஜின் விபரம் ?

162.71cc என்ஜின் அதிகபட்சமாக 7,500rpm-ல் 13.5 hp பவர், 14.6 NM டார்க் ஆனது 5500rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் SP160 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

2024 ஹோண்டா SP160 பைக்கின் மைலேஜ் 48 கிமீ வழங்கலாம்.

ஹோண்டா SP160 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?

ஹோண்டா எஸ்பி 160 போட்டியாளர்கள் யமஹா FZS-Fi V4 Dlx, சுசூகி ஜிக்ஸர், பல்சர் NS160, பல்சர் N160, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி

ஹோண்டா SP 160 பைக்கின் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

தமிழ்நாட்டின் விலை அறிவிக்கப்படாத காரணத்தால் தோராயமான விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
SP160 Single Disc - ₹.1,46,964
SP160 Dual Disc - ₹ 1,52,456

ஹோண்டாவின் எஸ்பி 160 பைக்கின் வேரியண்ட் விபரம் ?

இருபக்க டயர்களிலும் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்ட குறைந்த விலை வேரியண்ட் என ஹோண்டா SP 160 பைக் பெற்றுள்ளது.

2024 Honda SP 160 Bike Image Gallery

honda sp160 bike 1
honda sp 160 bike tank
honda sp 160 red colour
honda sp160 tank extension
honda sp 160 tank
honda sp 160 tail light
honda sp160 sideview
honda sp 160 seat
honda sp 160 digital cluster
honda sp160 bike on-road price
honda sp160
honda sp 160 engine
honda sp 160 Pearl Igneous Black
honda sp 160 Matte Marvel Blue Metallic
honda sp 160 Pearl Deep Ground
honda sp 160 Pearl Spartan Red
honda sp160 price
Honda Sp160
honda sp 160 side view
honda sp 160 Matte Axis Grey Metallic

Last Updated 2024-08-31

Tags: 160cc BikesHonda SP 160
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

Honda CB350 H'ness on-road price

2025 ஹோண்டா CB350 ஹைனெஸ் விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

2025 ஹோண்டா எஸ்பி 125

2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

2025 ஹோண்டா ஆக்டிவா 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

2025 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

2024 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்

2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

Renault Boreal suv in tamil

7 இருக்கை ரெனால்ட் போரியல் எஸ்யூவி இந்திய அறிமுகம் எப்பொழுது.!

global spec ktm 390 enduro r

ரூ.3.54 லட்சத்தில் சர்வதேச கேடிஎம் 390 Enduro R விற்பனைக்கு வந்தது

டெஸ்லா

ஜூலை 15., இந்தியாவில் டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் அறிமுகம்.!

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

கேரன்ஸ் கிளாவிஸ்.இவி., K-Charge பிளாட்ஃபார்ம் அறிமுகம் செய்த கியா இந்தியா

new BMW 2 Series Gran Coupe

புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே காருக்கான முன்பதிவு துவங்கியது

KTM 390 அட்வென்ச்சர் X

புதிய வசதிகளுடன் கேடிஎம் 390 அட்வென்ச்சர் X+ விற்பனைக்கு வந்தது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan