Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto News

ரூ. 5.64 லட்சத்தில் மஹிந்திரா ஓஜா டிராக்டர் அறிமுகமானது

By MR.Durai
Last updated: 15,August 2023
Share
SHARE

mahindra oja

இலகு எடை கொண்ட பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கபட்டுள்ள மஹிந்திரா ஓஜா டிராக்டர் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்றைக்கு மஹிந்திரா Oja 27 hp காம்பேக்ட் பிரிவில் 2121, 2124, 2127 மற்றும் 2130 ஆகியவற்றுடன் சிறிய யூட்டிலிட்டி ரகத்தில் oja 40 hp பிரிவில் 3132, 3136, மற்றும் 3140 என மொத்தமாக 7 டிராக்டரை வெளியிட்டுள்ளது.

இன்றைக்கு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி மஹிந்திரா அறிமுகம் செய்துள்ள  20HP – 40HP (14.91kW – 29.82kW) பிளாட்ஃபாரத்தில் ஓஜா 27hp மாடல் ஆரம்ப விலை ரூ.5.64 லட்சம் மற்றும் ஓஜா 40 hp ஆரம்ப விலை ரூ.7.35 லட்சம் ஆகும்.

Mahindra Oja Tractors

4WD கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஓஜா டிராக்டர் மாடல்கள் PROJA, MYOJA, மற்றும் ROBOJA உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக வந்துள்ள இந்த மாடல்கள் அதிநவீன வசதிகள் சிறப்பான கையாளுதலை பெற்றதால் விவசாய பயன்பாட்டிற்கான உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் என மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது.

இந்த டிராக்டர்களில் மூன்று மேம்பட்ட தொழில்நுட்ப அமசங்களான  PROJA, MYOJA மற்றும் ROBOJA பற்றி பார்க்கலாம். PROJA உற்பத்தித்திறன் பேக்கிற்கான அடிப்பையில், வாடிக்கையாளர்கள் முன்னோக்கி/தலைகீழ் ஷட்டில் மற்றும் க்ரீப்பர், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங், எலக்ட்ரிக் வெட் PTO மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் DRL ஆகியவற்றைப் பெறுவார்கள்.

MYOJA பேக் சர்வீஸ் தொடர்பான அம்சங்களுடன் டெலிமாடிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

ROBOJA பேக், டர்னிங் மற்றும் ரிவர்ஸ் செய்யும் போது ஆட்டோ PTO ஆன்/ஆஃப், ஆட்டோ பிரேக்கிங், எலக்ட்ரானிக் டெப்த் மற்றும் டிராஃப்ட் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் க்விக் ரைஸ் மற்றும் லோயர் மற்றும் ஆட்டோ இம்ப்ளிமென்ட் லிஃப்ட் ஆகியவற்றை வழங்கும்

மேலும் இந்த பிரிவில் அடுத்ததாக ஓஜா சப்-காம்பாக்ட் 20-25hp, பெரிய பயன்பாடு (45-70hp) ஆகியவற்றில் டிராக்டர் வெளியிடப்பட உள்ளது. 4 பிரிவுகளில் 40 மாடல்களுடன் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 4 சந்தைகளுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

oja tractors

தெலுங்கானாவில் உள்ள மஹிந்திரா டிராக்டர் ஜஹீராபாத் ஆலையில் 1,087 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இரண்டு ஷிப்ட் முறையில் ஆண்டுக்கு 100,000 டிராக்டர்களுக்கு மேல் தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது.

mahindra be6 batman edition suv
BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா
குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்
செப்டம்பர் 1 முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை 3% உயருகின்றது
கியா இந்தியாவில் சிரோஸ் EV விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா.!
75 நாடுகளில் ஒரு கோடி வேகன்ஆர் கார்களை விற்பனை செய்த சுசூகி
TAGGED:Mahindra Oja
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
சுசூகி ஜிக்ஸர் sf 155
Suzuki
2025 சுசூகி ஜிக்ஸர் SF 155 பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
hero splendor plus xtec disc brake
Hero Motocorp
ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விலை, மைலேஜ், நிறம் , சிறப்பம்சங்கள்
2025 Royal Enfield Guerrilla 450 new
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved