Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Car News

ரூ.8 லட்சத்தில் வரவுள்ள 2024 கியா சொனெட் எஸ்யூவி டீசர் வெளியானது

By MR.Durai
Last updated: 1,December 2023
Share
SHARE

2024 kia sonet teaser

வரும் டிசம்பர் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள கியா மோட்டார் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சொனெட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டீசரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் உள்ள வென்யூ காரின் பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளும் மாடலாகும்.

ஏற்கனவே வென்யூ மாடல் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெற்றதாக விளங்கும் நிலையில், இரண்டாவது மாடலாக சோனெட் விளங்க உள்ளது.

2024 Kia Sonet

வெளியிடப்பட்ட டீசர் மூலம் 2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்டில் முன்புற எல்இடி ஹெட்லைட் பெரிதாக மாற்றமில்லாமல் எல்இடி ரன்னிங் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. செங்குத்தான பனி விளக்குடன் புதிய பம்பரை முன்புறத்தில் பெறுகின்றது.

இண்டிரியரில் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் புதிய பெரிய 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பல்வேறு வசதிகள் பெற உள்ளது. புதிய அம்சங்களில், 360 டிகிரி கேமராவும், ADAS தொகுப்பும் இருக்கலாம்.

போஸ் சவுண்ட் சிஸ்டம், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் தானியங்கி காலநிலை கட்டுப்பாடு போன்றவற்றை பெறக்கூடும்.

ADAS தொகுப்பில் முன்புற மோதல் எச்சரிக்கை, லேன் புறப்படும் எச்சரிக்கை, முன்னோக்கி மோதல் தவிர்ப்பு உதவி மற்றும் எச்சரிக்கை, ஹை பீம் அசிஸ்ட், லேன் கீப்பிங் உதவி மற்றும் பல வசதிகள் பெறலாம்.

kia sonet facelift interior teaser

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல்,  83hp பவர் வழங்குகின்ற 1.2-லிட்டர் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜினில் , 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

120hp பவர் மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் T- GDi டர்போ பெட்ரோல் என்ஜின் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டிசிடி மட்டுமே பெறுகின்றது.

1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் கொண்ட 116 hp பவர் மற்றும் 240 Nm டார்க் வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டு 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது மற்றும் 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மாடல் உள்ளது.

2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்படுவதுடன் டெலிவரியும் துவங்கப்படலாம். சொனெட் போட்டியாளர்களாக டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, நிசான் மேக்னைட், ரெனோ கிகர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ், வரவிருக்கும் டொயோட்டா டைசோர் ஆகியவை உள்ளன.

Mahindra Thar Earth Edition in tamil
நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!
புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்
2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்
பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்
எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்
TAGGED:Kia Sonet
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2023 hero Super Splendor xtech Bike
Hero Motocorp
ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், Xtech பைக்கின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
பல்சர் 125 பைக்
Bajaj
பஜாஜ் பல்சர் 125 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
டியோ 125 ஸ்கூட்டர் ரேட்
Honda Bikes
ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் வசதிகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms