3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற 2017 சுஸூகி ஸ்விஃப்ட் : யூரோ என்சிஏபி

ஐரோப்பாவின் 2017 சுஸூகி ஸ்விஃப்ட் கார் மாடல் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனையில் 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. தானியங்கி பிரேக் பெற்ற டாப் வேரியன்ட் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

2017 சுஸூகி ஸ்விஃப்ட் கிராஷ் டெஸ்ட்

ஐரோப்பா சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற புதிய தலைமுறை சுஸூகி ஸ்விஃப்ட் கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் அடிப்படை மாடல் 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. தானியங்கி பிரேக் மற்றும் ரேடார் பாதுகாப்பு போன்ற வசதிகளை கூடுதல் பாதுகாப்பு பெற்ற மாடல் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

ads

6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, லோட் லிமிட்டெர், ஐஎஸ்ஓஃபிக்ஸ் போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை பெற்ற மாடல் வயது வந்தோர் பாதுகாப்பில் 83 சதவிகிதமும் சிறியவர் பாதுகாப்பில் 75 சதவிகிதமும் , பாதாசாரிகள் பாதுகாப்பில் 69 சதவிகிதம் மற்றும் பாதுகாப்பு உதவியில் 44 சதவிகிதமும் பெற்று விளங்குகின்றது.

4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மாடலில் கூடுதலாக தானியங்கி பிரேக், ரேடார் பிரேக் போன்றவற்றை கூடுதலாக பெற்ற டாப் வேரியண்ட் வயது வந்தோர் பாதுகாப்பில் 88 சதவிகிதமும் சிறியவர் பாதுகாப்பில் 75 சதவிகிதமும் , பாதாசாரிகள் பாதுகாப்பில் 69 சதவிகிதம் மற்றும் பாதுகாப்பு உதவியில் 44 சதவிகிதமும் பெற்று விளங்குகின்றது.

இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் 2018 சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியிடப்படமும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு காற்றுப்பைகள் பெற்று ஏபிஎஸ் போன்றவை பெற்றிருக்கும். ஐரோப்பா மாடலுக்கு இந்தியா மாடல் ஈடுகொடுக்காது என்பதனை மறந்துவிடாதீர்கள்.. இந்திய மாடல் என மதிப்பீட்டை பெறும் உங்கள் கருத்து என்ன ?

Comments