Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

மேம்படுத்தப்பட்ட பிஎஸ் 4 மாசு கட்டுப்பாடு எஞ்சின் மற்றும் ஏஹெச்ஓ வசதியுடன் 2017 சுஸூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் மாடல் ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பான வசதிகளை கொண்ட மாடலாக ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் விளங்குகின்றது. 2017 சுஸூகி ஆக்செஸ் 125 வருகின்ற ஏப்ரல் 1 முதல் அனைத்து பைக்குகளிலும் பிஎஸ்4 எஞ்சின் பொருத்தப்பட வேண்டியா கட்டாயம் ஏற்ப்படுள்ளதால் அனைத்து வாகன தயாரிபாளர்களும் பிஎஸ் 4 சார்ந்த மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வரிசையில் சுசூகி நிறுவனத்தின் ஜிக்சர் பைக்குகளை தொடர்ந்து ஆக்செஸ் 125 மாடலிலும் பிஎஸ் 4 மாசு விதிகளுக்கு ஏற்ற எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8.7 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.2என்எம் ஆகும். சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ள ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் புதிய பிஎஸ் 4 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.…

Read More

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 சுஸூகி ஜிக்ஸெர் , சுஸூகி ஜிக்ஸெர் SF பைக்குகள் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஜிக்சர் பைக்கில் பிஎஸ் 4 எஞ்சின் மற்றும் ஏஹெச்ஓ வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. 2017 சுஸூகி ஜிக்ஸெர் வருகின்ற ஏப்ரல் 1 முதல் அனைத்து பைக்குகளிலும் பிஎஸ்4 எஞ்சின் பொருத்தப்பட வேண்டியா கட்டாயம் ஏற்ப்படுள்ளதால் அனைத்து வாகன தயாரிபாளர்களும் பிஎஸ் 4 சார்ந்த மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. ஜிக்சர் அணிவரிசை மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டரிலும் புதிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. 2017 மாடலில் புதிய பாடி கிராபிக்ஸ் , ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதி , கிளியர் லென்ஸ் கொண்ட டெயில் விளக்கு போன்றவை பெற்றுள்ளது. எஃப்ஐ எஞ்சின் மாடலிலும் பிஎஸ் 4 வகை மாசு கட்டுப்பாடு எஞ்சினை பெற்றுள்ளது. 14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ்…

Read More

டாடா மோட்டார்சின் டாமோ பிராண்டில் எதிர்கால தொழில்நுட்பங்களை கொண்ட கார்களை உருவாக்கும் நோக்கில் டாடா மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாமோ பிரசத்தி பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கார்களுக்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் வகையிலான நுட்பத்தினை பெற்றுள்ள மைக்ரோசாஃப்ட் கனெக்டேட் வெய்கிள் பிளாட்பாரத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் டாடா மோட்டார்ஸ் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. டாடா மோட்டார்சின் புதிய மொபிலிட்டி பிராண்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாமோ பிராண்டு காரின் வாயிலாக மைக்ரோசாஃப்ட் நுட்பங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 7 ,2017 ல் நடைபெற உள்ள 87வது ஜெனிவா மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் முதல் டாமோ பிராண்ட் கார் மாடல் சர்வதேச அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடலின் வாயிலாக ஆட்டோமொபைல் சார்ந்த செயல்பாடுகளை கொண்ட மைக்ரோசாஃப்ட் ஆப்ஸ்கள் பயன்படுத்தப்படிருக்கும். [irp posts=”16243″ name=”டாமோ ஃப்யூச்சரோ டீஸர் – 2017…

Read More

கடந்த 2012 ம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள மாருதியின் எர்டிகா எம்பிவி காரில் கூடுதல் வசதிகளை கொண்ட வரையறுக்கப்பட்ட பதிப்பு ரூபாய் 7.85 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  எர்டிகா காரின் VXi மற்றும் VDi வேரியன்டில் மட்டுமே கிடைக்கும். மாருதி எர்டிகா 7 இருக்கைகளை கொண்ட எர்டிகா மாடலின் சிறப்பு பதிப்பில் பல்வேறு துனைகருவிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பதிப்பு மாடலுக்கு புதிதாக மெரூன் வண்ணம் சேர்க்கப்பட்டு கூடுதலாக வெள்ளை , சிலவர் என மொத்தம் 3 வண்ணங்களில் கிடைக்க உள்ளது. புதிய பொலிவினை பெற்ற அலாய் வீல்கள், பனி விளக்குகளை சுற்றி க்ரோம் பட்டை , பக்கவாட்டில் க்ரோம் மோல்டிங் , லிமிடேட் எடிசன் சிறப்பு பேட்ஜ் போன்றவற்றுடன் உட்புறத்தில் கருப்பு சார்ந்த வண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிரிமியம் இருக்கை கவர்கள் ,  மரவேலைப்பாடு மிக்க டேஸ்போர்டு , ஆம்பியன்ட் லைட்டுகள் ,  இரட்டை வண்ண ஸ்டீயரிங் வீல் உறை…

Read More

இந்திய ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் ரூபாய் 3.26 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா ஆர்-3 பைக்கில் மெயின் பவர் சுவிட்ச் மற்றும் எரிபொருள் கலன் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் உள்ள கோளாறுகளை சரிசெய்ய திரும்ப அழைக்கப்படுகின்றது. யமஹா ஆர்-3 இந்தியாவில் விற்பனை செய்யபட்டுள்ள ஆர்3 மாடலில் 1155 பைக்குகளில் உள்ள  மெயின் பவர் சுவிட்ச் பகுதியில் நீர் படும்பொழுது அவற்றில் துருப்பிடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர எரிபொருள் கலன் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் உள்ள தாங்கி பிடிக்கும் கொக்கிகளில் அதாவது  பிராக்கெட்டுகளில் உள்ள கோளாறு காரணமாக எரிபொருள் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு பெட்ரோல் வெளியேறும் வாய்ப்புள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த இரு கோளாளுகளையும் சரிசெய்யும் நோக்கிலே ஆர்-3 பைக்குகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள யமஹாவின் அனைத்து அதிகார்வப்பூர்வ டீலர்கள் வாயிலாகவும் இந்த குறைகளை இலவசமாக நீக்கி  தரப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இதுகுறித்தான தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யமஹா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. யமஹா ஆர்-3…

Read More

வருகின்ற மார்ச் 3 , 2017ல் மாருதியின் பலேனோ ஆர்எஸ் மாடல் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதரன மாடலை விட கூடுதலான பவரை வெளிப்படுத்தும் மாடலாக பலேனோ ஆர்எஸ் விளங்கும். பலேனோ ஆர்எஸ் விற்பனையில் உள்ள மாடலை போன்ற தோற்ற அமைப்பினை பெற்றதாக வரவுள்ள ஆர்எஸ் மாடலில் சிறிய அளவிலான தோற்ற மாற்றங்கள் , கூடுதல் வசதிகள் மற்றும் கருப்பு வண்ண இன்டிரியரை பெற்றிருக்கும். பெலினோ ஆர்எஸ் காரின் நீளம் 3,995 மிமீ , அகலம் 1,745 மிமீ மற்றும் உயரம் 1,510 மீமீ மேலும் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையலான இடைவெளி அதாவது வீல்பேஸ் 2,520 மிமீ ஆகும். பலேனோ RS 100 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 நியூட்டன்மீட்டர் ஆகும்.  பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்…

Read More