ட்யூப்லஸ் டயர் சிறந்ததா அல்லது ட்யூப் டயர் சிறந்ததா எந்த டயர் வாங்கலாம் என அலசலாம். ட்யூப்லஸ் டயர் vs ட்யூப் டயர் எது சிறந்தது .. என்ற உங்கள் சந்தேகங்களுக்கு இந்த பதிவில் பதில் கானலாம். ட்யூப் டயர் ட்யூப் டயர் பல காலமாக பயன்பாட்டில் உள்ள டயர் ஆகும். ட்யூப் டயர் பல்வேறு விதமான குறைகளை கொண்டதாகும். பஞ்சர் ஏற்பட்டால் உடனடியாக காற்று வெளியேறும். ட்யூப் டயரில் உள்ள பல குறைகளை தவிர்த்து மேம்படுத்தப்பட்ட டயரே ட்யூப்லஸ் டயர் ஆகும். ட்யூப்லஸ் டயர் ட்யூப்லஸ் டயர் பல நன்மைகளை கொண்ட டயர் ஆகும். 1. ட்யூப்லஸ் டயரில் பஞ்சர் ஆனால் காற்று மெல்லமாக வெளியேறும். இதனால் பஞ்சர் கடைக்கு செல்லும் வரை தாக்குப்பிடிக்கும். 2. அதிர்வுகள் ட்யூப் டயரை விட குறைவாக இருக்கும் என்பதால் சொகுசான பயணமாக அமையும். 3. அதிகப்படியான வெப்பத்தால் டயர் வெடிக்காது. 4. விபத்துகளின்…
Author: MR.Durai
சர்வதேச அளவில் முதன்முறையாக வரத்தகரீதியான பறக்கும் கார் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. PAL-V லிபிர்ட்டி பறக்கும் காரின் ஆரம்ப விலை ரூ. 2.52 கோடி ஆகும். முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி 2018ம் ஆண்டின் இறுதியில் வழங்கப்பட உள்ளது. பறக்கும் கார் டச் நாட்டை சேர்ந்த PAL-V நிறுவனம் வடிவமைத்துள்ள லிபர்ட்டி ஸ்போர்ட் மற்றும் லிபர்ட்டி பாய்னியர் என இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மூன்று சக்கரங்களுடன் இரு இருக்கைகளை கொண்டுள்ள இந்த மாடல்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 179 கிமீ ஆகும். PAL-V லிபர்ட்டி ஸ்போர்ட் – ரூபாய் 2.52 கோடி ($3,99,000) PAL-V லிபர்ட்டி பாய்னியர் – ரூபாய் 3.78 கோடி ($5,99,000) பறக்கும் நிலையிலிருந்து சாலை நிலைக்கு மாற 5 முதல் 10 நிமிடங்கள் வரை எடுத்துக்கொள்ளும். இரு எஞ்சின்களை பெற்றுள்ள இந்த கார்களில் பறக்கும் நிலையில் ரோடார் எஞ்சினும் , சாலை நிலைக்கு ஏற்ற எஞ்சினும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலிருந்தும் பறக்கும் தன்மை கொண்ட இந்த…
இந்தியாவில் 2017 ஹோண்டா சிட்டி கார் ரூபாய் 8,49,990 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் வகைகளில் கூடுதலாக வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. 2017 ஹோண்டா சிட்டி கார் நவீன சிவிக் காரின் டிசைன் தாத்பரியங்களை பெற்று மிக நேர்த்தியான க்ரோம் பூச்சூ கிரிலை பெற்று அதன் மத்தியில் ஹோண்டா லோகோ பதிக்கப்பட்டுள்ளது. புதிய தோற்றத்தை வெளிப்படுத்த இணைக்கப்பட்டுள்ள டாப் வேரியன்டில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் , எல்இடி பனி விளக்குகள் , காரின் பக்கவாட்டில் முந்தைய 15 அங்குல அலாய் வீலுக்கு மாற்றாக புதிய வடிவம் கொண்ட 16 அங்குல அலாய் வீல் , நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்களுடன் எல்இடி நிறுத்த விளக்குகள் அமைப்பினை பின்புறத்தில் பெற்று விளங்குகின்றது. S, SV, V, VX, மற்றும்…
மேம்படுத்தப்பட்ட புதிய ஆடி A4 35TDI மாடல் ரூ. 40.20 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய வசதிகளுடன் கூடுதலான பவரை வெளிப்படுத்தும் 2017 ஆடி ஏ4 டீசல் வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஆடி ஏ4 டீசல் 2017 ஆடி A4 35 TDI காரில் 2.0 லிட்டர் TDI டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு 190 hp பவருடன் 400 Nm டார்க்கினை வழங்குகின்றது. முன்பக்க சக்கரங்களுக்கு பவரை கொண்டு செல்ல 7 வேக S-Tronic டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஏ4 டீசல் கார் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 7.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அதிகபட்சமாக மணிக்கு 237 கிமீ வேகத்தை தொடும் திறனை கொண்டுள்ளது. முந்தைய காரை விட 7 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற்றுள்ள புதிய ஏ4 டீசல் காரின் ஆராய் அளித்துள்ள மைலேஜ் ஒரு லிட்டருக்கு 18.25 கிமீ ஆகும். முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள புதிய…
இந்திய ஆட்டோமொபைல் அடையாளங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் கார் பிராண்டினை ரூபாய் 80 கோடி விலையில் பிரான்ஸ் நாட்டின் பீஜோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேம்படுத்தப்பட்ட மாடலாக ஹெச்எம் அம்பாசிடர் கார் ரூபாய் 6 முதல் 10 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. சமீபத்தில் சிகே பிர்லா நிறுவனம் (ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உரிமையாளர்) பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஏ குழுமத்துடன் இணைந்து இந்திய சந்தையில் பீஜோ மற்றும் சிட்ரோன் கார்களை விற்பனை செய்யும் நோக்கில் கூட்டணியை அறிவித்துள்ள நிலையில் 56 ஆண்டுகால வரலாற்று புகழ்மிக்க அம்பாசிடர் கார் பிராண்டினை பிஎஸ்ஏ கைப்பற்றியுள்ளது. அம்பாசிடர் கார் வரலாறு 1954 ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த லேண்ட்மாஸ்டர் (1954-1958) என்ற பெயரில் வந்த மாடலே 1958 ஆம் ஆண்டிற்கு பிறகு அம்பாசிடர் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் விற்பனைக்கு வந்தது. மாடல்கள் வரிசை வரலாறு……… லேண்ட்மாஸ்டர் (1954-1958) அம்பாசிடர் MK1 (1958-1962)…
வருகின்ற ஏப்ரல் 2017 ல் நடைபெறவுள்ள சாங்காய் ஆட்டோ ஷோ 2017 அரங்கில் உற்பத்தி நிலை லம்போர்கினி உரஸ் எஸ்யூவி காட்சிக்கு வரவுள்ளது. ஆன்ரோடு மற்றும் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலாக உரஸ் விளங்கும். உரஸ் எஸ்யூவி முதன்முறையாக 2012 ஆட்டோ சீனா ஷோ வாகன கண்காட்சியில் பார்வைக்கு வந்த உரஸ் கான்செப்ட் மாடல் 5 ஆண்டுகளுக்கு பிறகு உற்பத்தி நிலை மாடலாக காட்சிக்கு வருகின்றது. ஹைபிரிட் வசதியுடன் வரவுள்ள லம்போர்கினி நிறுவனத்தின் முதல் மாடலாக இந்த எஸ்யூவி இடம்பிடிக்க உள்ளது. இத்தாலியின் சான்டா அகடா தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட உள்ள உரஸ் எஸ்யூவி காரின் விற்பனையை ஆண்டுக்கு 3500 எண்ணிக்கையில் விற்பனை செய்யும் நோக்கில் லம்போர்கினி திட்டமிட்டு வருகின்றது. பல்வேறு பிரிமியம் வசதிகளை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த மாடலில் பிளக்-இன் ஹைபிரிட் 4.0 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பென்டைகா மற்றும் ஆடி க்யூ7 கார்களில்…