ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டு உயர்வேக ஸ்கூட்டர் உட்பட ஒரு மின்சார பைக் மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற ரிவோல்ட் உட்பட ஏத்தர் , சேட்டக் மற்றும் ஐக்யூப் போன்ற மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.
குறைந்த வேகம் வழங்குகின்ற மின்சார ஸ்கூட்டர் சந்தையில் மிகப்பெரும் சந்தை மதிப்பினை கொண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் டீலர்களை பெற்றுள்ள முஞ்சால் குடும்பத்தின் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் உயர்வேக ஸ்கூட்டரின் டீசரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் எல்க்ட்ரிக் பைக் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், அலாய் வீல், யூஎஸ்டி ஃபோர்க்கு, மற்றும் பெல்ட் டிரைவ் கொண்டதாக வெளிவந்துள்ள படங்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இரு பக்க கைப்பிடிகளிலும் பிரேக் லிவர் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரவுள்ள ஸ்கூட்டர் மற்றும் பைக் அனேகமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுவாக விற்பனைக்கு வருகின்ற அனைத்து எலெக்ட்ரிக் வானங்களிலும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிளை பெறுவதனை அடிப்படையாகவே கொண்டுள்ளதால் இதுபோன்ற அம்சங்களை இந்த புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலும் பெற வாய்ப்புள்ளது.
2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியாக உள்ள ஹீரோ எலெக்ட்ரிக் பைக் மாடல் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக விளங்க உள்ளது.