Site icon Automobile Tamilan

கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : ஆட்டோ எக்ஸ்போ 2023

kia ev9 concept

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் அடிப்படையிலான உற்பத்தி நிலை மின்சார கார் விற்பனைக்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

சர்வதேச அளவில் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் மின்சார் கார்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி

E-GMP மின்சார கார்களுக்கான பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இவி9 காரின் வடிவமைப்பு வழக்கமான எஸ்யூவி கார்களுக்கு உரித்தான பாக்ஸ் வடிவத்தை கொண்டுள்ளது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கான்செப்டில் எல்இடி லைட் மற்றும் இசட் வடிவ ஹெட்லேம்ப் கிளஸ்டர் ஆகியவற்றைக் கொண்டு இந்நிறுவனத்தின் பாரம்பரியமான ‘டைகர் நோஸ்’ கிரில் வழங்கப்பட்டுள்ளது. மெலிதான கோடுகள், தட்டையான மேற்பரப்புகள் மற்றும் சி பில்லருக்கு பின் கூர்மையான கிங்க் கொண்ட பெரிய கண்ணாடி கொண்டுள்ளது. பின்புறம் செங்குத்து LED டெயில்-லேம்ப்கள் கொண்டுள்ளது.

EV9 கார் 4,929mm நீளம், 2,055mm அகலம் மற்றும் 1,790mm உயரம் ஆகியவற்றை பெற்றுள்ளது. இது 3,100 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. இது எலெக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்ஃபார்ம் (E-GMP) மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேபின், டேஷ்போர்டின் ஸ்டீயரிங் பின்னால் உள்ள யூனிட் அனைத்து ஓட்டுனர் தொடர்பான தரவுகளையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சென்ட்ரல் டிஸ்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் பல்வேறு காரின் செயல்பாடுகளுக்கானது.

EV9 கான்செப்ட்டுக்கான பவர்டிரெய்ன் விவரங்களை கியா வெளியிடவில்லை. EV9 கான்செப்ட் 77.4kWh பேட்டரி பேக்கை பெற வாய்ப்புள்ளது.

Read More.. கியா கேஏ4 கார் சிறப்புகள்

Exit mobile version