அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள டாடா டிகோர் செடான் கார் 2017 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டியாகோ காரின் அடிப்படையில் உருவான மாடலாக டிகோர் விளங்குகின்றது.

டாடா டிகோர் கார்

கைட் 5 என அழைக்கப்பட்டு செடான் காரின் பெயரையே டிகோர் என டாடா சமீபத்தில் மாற்றியது. தற்பொழுது சுவிஸ் நாட்டில் நடந்த வருகின்ற ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டிகோர் ஜெனிவா எடிசன் மாடல் காட்சிக்கு வந்துள்ளது.

 

 

டியாகோ காரின் அடிப்படையிலே உருவாக்கப்பட்ட இம்பேக்ட் டிசைன் தாத்பரியங்களை பெற்றுள்ள இந்த மாடலில் கூபே கார்களில் இடம்பெற்றுள்ளதை போன்ற செடான் ரக கார்களுக்கு உரித்தான பூட் டிசைன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்டைல்பேக் (Styleback) என டாடா அழைக்கின்றது.

69bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8bhp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் டியாகோ பெட்ரோல் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளதை போன்றே இந்த மாடலிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் தாமதமாக விற்பனைக்கு வரலாம். வருகின்ற மார்ச் 29ந் தேதி டிகோர் செடான் கார் விற்பனைக்கு வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டாடா டமோ பிராண்டில் ரேஸ்மோ கார் மற்றும் டாடா நெக்ஸான் மாடலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.