வருகின்ற அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள டாடா நெக்ஸான் எஸ்யூவி காரில் புதிய டீசல் என்ஜின் மற்றும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் காம்பேக்ட் ரக பிரிவில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் 2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவி

முதன்முறையாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த நெக்ஸான் கான்செப்ட் எஸ்யூவி இந்தியாவில் தீவரமான சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது உற்பத்தி நிலையை எட்டிய மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாடலில் நெக்ஸான் ஜெனிவா எடிசன் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

டாடாவின் புதிய இம்பேக்ட் டிசைன் வடிவ தாத்பரியங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நெக்ஸான் மாடலில் டாடாவின் புதிய கிரில் அம்சத்துடன் நேர்த்தியான வடிவமைப்பினை பெற்றதாக விளங்குகின்ற இந்த எஸ்யூவி காரில் ஹெட்லைட் உடன் இணைந்த பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளுடன் ,17 அங்குல அலாய் வீல் பெற்று விளங்குகின்றது.

உட்புறத்தில் டியாகோ மற்றும் வரவுள்ள டிகோர் செடான் கார்களை போன்ற டேஸ்போர்டினை பெற்றதாகவும் , 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று மிகவும் நேர்த்தியான கட்டுமானத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிதாக உருவாக்கப்பட்டு வரும் டாடா மோட்டார்சின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் கூடுதலாக ரெவோட்ரான் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும் இடம்பெற்றதாக நெக்ஸான் காரில் இருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனும் வரவாய்ப்புகள் உள்ளது.

ரூ. 7.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் போட்டியாளர்களாக ஈக்கோஸ்போர்ட் , விட்டாரா பிரெஸ்ஸா, டியூவி300 போன்ற மாடல்கள் விளங்கும். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சந்தைக்கு வரலாம்.