டாடா மோட்டார்சின் டாமோ ரேஸ்மோ கார் 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரேஸ்மோ கார் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விளங்கும் என டாடா தெரிவித்துள்ளது.

டாமோ ரேஸ்மோ

டாடா நிறுவனம் 20வது முறையாக பங்கேற்றுள்ள 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டாடா ரேஸ்மோ காரில் இரண்டு இருக்கைகளுடன் மிட் என்ஜின் ஆப்ஷனை பெற்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கனெக்டேட் கார் நுட்பத்தினை பெற்ற முதல் டாடா மாடலாக ரேஸ்மோ விளங்குகின்றது.

ஸ்போர்ட்டிவ் கார்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஆக்ரோஷமான தோற்றத்தை வெளிப்பட்டுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடாவின் ரேஸ்மோ காரின் முகப்பில் பை எல்இடி வட்ட வடிவ விளக்குகளை பெற்று விளங்குகின்றது. மேலே உயர்ந்த திறக்கும் பறக்கும் றெக்கை போன்ற அமைந்த கதவுகளுடன் வந்துள்ள இந்த காரின் முன்புறத்தில் 205/50 R17 ட்யூப்லெஸ் ரேடியல் டயர் மற்றும் பின்புறத்தில் 235/45 R18 ட்யூப்லெஸ் ரேடியல் டயரும் இணைக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து டாடாவின் டாமோ பிராண்டு கார்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கனக்டேட் கார் நுட்பத்தினை பெற்றதாக விளங்கும். இதன் வாயிலாக ரேஸ்மோ காரில் நேவிகேஷன் , வாகனத்தின் இருப்பிடம் சார்ந்த தகவல்கள் உள்பட பல்வேறு விதமான வசதிகளை பெற இயலும்.

மேலும் ரேஸ்மோ மாடலில் முன்பக்கத்தில் இரண்டு காற்றுப்பைகள் , 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் , ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற அம்சங்களை பெற்றதாக விளங்குகின்றது.

ரேஸ்மோ என்ஜின்

1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு  ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 186 bhp பவருடன் மற்றும் 210 Nm டார்க் வெளிப்படுத்தி 6 வேக ஏஎம்டி கியர்பாக்சினை பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டிவதற்கு வெறும் 6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் அதாவது 3885மிமீ நீளமும் , 1810மிமீ அகலமும் , 1208மிமீ உயரத்தினை பெற்றுள்ள இந்த காரின் வீல்பேஸ் 2430 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் 160மிமீ ஆகும். ரேஸ்மோ காரானது டாமோ பிராண்டின் மோஃபிளக்ஸ் ( MOFlex multi0material sandwich structure ) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காராகும்.

 

Tamo Racemo sportscar news in tamil