Auto Show

நிசான் IDS கார் கான்செப்ட் அறிமுகம் – டோக்கியோ

Spread the love

நிசான் நிறுவனம் ஐடிஎஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக் தானியங்கி காரை டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. நிசான் IDS கார் என்றால் Intelligent Driving System ஆகும்.

44-வது டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு வந்துள்ள நிசான் IDS கார் கான்செப்ட் எதிர்கால உலகின் தேவை சரிவர புரிந்து உருவாக்கப்பட்டுள்ள மிக சிறப்பான கான்செப்ட் மாடலாகும்.

தோற்றம்

சிறப்பான ஸ்டைலிசான தோற்றத்தில் விளங்கும் நிசான் ஐடிஎஸ் கான்செப்ட் மாடலின் தோற்றத்தில் முகப்பில் நிசான் பாரம்பரிய தோற்ற பொலிவில் எதிர்கால நுட்பத்தினை கொண்டு சிறப்பான வடிவத்துடன் விளங்குகின்றது. வாகனம் முழுதும் எல்இடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

உட்புறம்

4 இருக்கைகள் கொண்ட மாடலாக விளங்கும் நிசான் IDS கான்செப்டில் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். ஓட்டுதல் முறைகேற்ப  இரண்டு விதமான இண்டிரியர் அமைப்பினை மாற்றிகொள்ளும் வசதி உள்ளது.

இயக்க முறைகள்

ஐடிஎஸ் கான்செப்ட் மாடலில் இரண்டு விதமான ஓட்டும் முறையை பெற்றுள்ளது. அவை

பைலட் டிரைவிங் மோட்

பைலட் டிரைவிங் மோடில் ஓட்டுநருக்கு விருப்பமான முறை மற்றும் ஒட்டுநரின் வசதிகேற்ப இயங்கும். இந்த மோடில் இயக்கும்பொழுது ஸ்டீயரிங் உள்நோக்கி செல்கின்றது. மேலும் டேஸ்போர்டில் மிக அகலமான பிளாட் ஸ்கிரின் திரை  முன்நோக்கி தோன்றும்.

மெனுவல் டிரைவிங் மோட்

மெனுவல் டிரைவிங் மோடில் ஓட்டுநருக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும் ஓட்டுநருக்கு அவசரகாலத்தில் சிறப்பான பணியை ஆற்றும்.
பேட்டரி
அதிக செயல்திறன் கொண்ட 60kwh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் . இது நெடுந்தொலைவு செல்லவும் சிறப்பான செயல்திறனே வெளிப்படுத்தும்.

நிசான் IDS கார் Photo Gallery & Videos

நிசான் IDS கார் வீடியோ


Spread the love
Share
Published by
MR.Durai
Tags: Nissan