பீஜோ ஸ்கூட்டர்கள் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

மஹிந்திரா நிறுவனம் பீஜோ ஸ்கூட்டர்கள் பிரிவின் 51 % பங்குகளை கடந்த ஆண்டில் வாங்கியது. அதனை தொடர்ந்து டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மெட்ரோபோலிஸ் RS , ஸ்பீடுஃபைட் 4 மற்றும் ஜேங்கோ ஸ்கூட்டர்கள் காட்சிப்படுத்தபட்டது.

பீஜோ மெட்ரோபோலிஸ் ஆர்எஸ்

டெல்லி வாகன கண்காட்சி 2016 அரங்கில் காட்சிக்கு வந்த மெட்ரோபோலிஸ் ஆர்எஸ் ஸ்கூட்டரில் 32.75 PS திறனை வெளிப்படுத்தும் 399cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டூ `FI என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்று சக்கரங்களை கொண்டுள்ள  மெட்ரோபோலிஸ் ஆர்எஸ் மாடல் மிக நேர்த்தியான டிசைனுடன் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. முன்பக்க இருசக்கரங்களில் 200மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்கினை பெற்றுள்ளது.

பீஜோ ஸ்பீடுஃபைட் 4

எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த ஸ்பீடுஃபைட் 4 மாடல் ஸ்கூட்டரில் 10.19 PS திறனை வெளிப்படுத்தும் 124.8cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டூ `FI என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 130 கிலோ எடை ஸ்பீடுஃபைட் 4 ஸ்கூட்டர் மிக நேர்த்தியான ஸ்டைலுடன் காம்பி பிரேக்கிங் , புராஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் டிஜிட்டர் இன்ஸ்டூருமென்ட் கன்சோலை பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 226மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 210மிமீ டிஸ்கினை பெற்றுள்ளது. இது 4வது தலைமுறை ஸ்பீடுஃபைட் ஸ்கூட்டராகும்.

 

பியூஜியோட் ஜேங்கோ

பழைய தோற்றமைப்பில் அமைந்துள்ள ஜேங்கோ (DJango) மிகவும் இலகுவாக கவரும் தோற்ற அமைப்பில் அழகாக உள்ளது.  140 கிலோ எடையுடன் விளங்கும் ரெட்ரோ ஸ்டைல் ஜேங்கோவில் 10.19 ps ஆற்றலை வெளிப்படுத்தும் 124.6cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 200மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 190மிமீ டிஸ்கினை பெற்றுள்ளது.

பீஜோ ஸ்கூட்டர்கள் அடுத்த சில மாதங்களில் இந்திய சந்தையை ஆக்கரமிக்க உள்ளது. மஹிந்திரா ஸ்கூட்டர் பிரிவு வாயிலாகவோ அல்லது தனியான டீலர் நெட்வொர்கில் விற்பனைக்கு வரலாம்.