புதிய ஆர்8 சூப்பர்கார் முந்தைய காரை விட 50கிலோ வரை எடை குறைவாக இருக்கும். முற்றிலும் இலகுவான எடை மற்றும் வலுவான தரத்தினை தரவல்ல கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பாகங்களும் அலுமினியத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதால் எடை குறைவாக உள்ளது. ஆர்8 வி10 பிளஸ் வெறும் 1454 கிலோ எடையை மட்டுமே கொண்டுள்ளது.
ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் காரில் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 540எச்பி மற்றும் 610எச்பி என இரண்டு விதமான ஆற்றல்களில் ஆர்8 கிடைக்கும்.
610எச்பி ஆர்8 வி10 பிளஸ் மாடல் 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 3.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். உச்சகட்ட வேகம் மணிக்கு 330கிமீ ஆகும்.
தோற்றத்தில் பெரிதான மாற்றங்கள் இல்லை முன்பக்க பம்பர் மற்றும் கிரிலில் சிறிய மாற்றங்கள் பெற்றுள்ளன. புதிய முகப்பு விளக்கு கிளஸ்டர் மேலும் எல்இடி முகப்பு விளக்கு நிரந்தர அம்சமாக இருக்கும். லேசர் ஒளிகற்றை விளக்கு ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னும் சில மாதங்களில் ஐரோப்பாவில் புதிய ஆர்8 கார் விற்பனைக்கு வரும் அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு வரவுள்ளது.