Automobile Tamilan

அசர வைக்கும் ஆடம்பர கார் பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கான்செப்ட் அறிமுகம்..!

உலகின் முன்னணி சொகுசு கார் பிராண்டுகளில் ஒன்றான பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் புதிய பிஎம்டபுள்யூ 8 சீரிஸ் ( BMW 8 Series) ஸ்போர்ட்ஸ் கூபே ரக கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பிஎம்டபுள்யூ 8 சீரிஸ்

மிகவும் அட்டகாசமான உயர்தர சொகுசு வசதிகளுடன் வரவுள்ள பிஎம்டபிள்யூ மோட்டார் தயாரிப்பாளரின் அடுத்த ஆடம்பர 8 வரிசை மாடலின் முதல் கான்செப்ட் இரு கதவுகளுடன் கூடிய கூபே ரகத்தை சார்ந்த வகையில் வடிவமைக்கப்படலாம் என்பதற்கு ஏற்ப கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் மற்ற எண் சீரிஸ் கார்களை போன்ற இந்த கான்செப்ட்டிலும் 825, 830, 835, 850, 845, 860, M8 மற்றும் M850 போன்றவைகளும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த வரிசையிலும் பெர்ஃபாமென்ஸ் ரக M8 இடம்பெற்றுள்ளது. கான்செப்ட் மாடலில் எஞ்சின் நுட்ப விபரங்களை பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த மாடலில் எதிர்பார்க்கபடுகின்ற எஞ்சின் அதிகபட்சமாக 610 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 6.6 லிட்டர் V12 ட்வீன் டர்போ எஞ்சினை பெற்றிருக்கலாம்.

வடிவ தாத்பரிங்கள் மற்றும் இன்டிரியர்

BMW நிறுவனத்தின் பாரம்பரிய கிட்னி வடிவ கிரில் அமைப்பபு மிக அகலமாகவும் நேர்த்தியாகவும் வழங்கப்பட்டு அட்டகாசமான வடிவத்தை முகப்பில் வெளிப்படுத்துகின்றது. முன்புற அமைப்பில் லேசர ஹெட்லைட் அமைப்பு, காற்றினை உள்ளேடுத்து செல்ல மிக அகலமான கிரில் அமைப்பு போன்றவற்றுடன் இரட்டை கதவுகளை கொண்டு விளங்குகின்றது.

பக்கவாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கான்செப்ட் மாடலில் 21 அங்குல லைட்வெயிட் அலாய் வீல் பின்புறத்தில் நீளமான எல் வடிவத்தை வெளிப்படுத்தும் எல்இடி டெயில் விளக்கு, கார்பன் ஃபைபர் கொண்டு வடிவமைக்கப்பட்ட டிஃப்பியூசர் போன்றவற்றுடன் சரிவக தோற்றத்திலான புகைப்போக்கியை பெற்றுள்ளது.

குறைக்கப்பட்ட கோடுகளை கொண்ட மிக நேர்த்தியான இன்டிரியர் அமைப்பில் கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் உள்பட, லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவற்றுடன் ஐடிரைவ் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அலுமினியம் ஸ்போக் பெற்ற கஸ்டம் ஸ்டீயரிங் வீல் என உயர்தர ஆடம்பர வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

உயர்தர ஆடம்பர வசதிகளை பெற்ற சொகுசு மாடலாக வரவுள்ள பிஎம்டபுள்யூ 8 சீரிஸ் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஎம்டபுள்யூ 8 சீரிஸ் படங்கள்

வாசகர்களே..! ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின்  மோட்டார் டாக்கீஸ் பகுதியில் உள்நுழைந்த உங்கள் விருப்பமான பகிர்வுகளை  விருப்பம் போல பகிர்ந்து கொள்ளலாம் மேலும்கேள்விகளை பதிவு செய்யலாம்.. உள்நுழைய புதிய கணக்கை தொடங்க இங்கே க்ளிக் செய்க… கட்டுரையை பதிவு செய்வது குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்க..! உள்நுழைவதில் சிரமங்கள் மற்றும் பதிவிடுவதில் சிரமங்கள் ஏற்பட்டால் புகாருக்கு..இங்கே க்ளிக் பன்னுங்க.. –> http://bit.ly/motortalkies

Exit mobile version