இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், வருகின்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ள யமஹா R15 V3.0 பைக்கிற்கு டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் யமஹா நிறுவனத்தால் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
வருகின்ற பிப்ரவரி 9ந் தேதி முதல் 14ந் தேதி வரை கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்தியன் எக்ஸ்போ மார்டில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் யமஹா நிறுவனம் புதிய ஏரோக்ஸ் 150சிசி ஸ்கூட்டர் , ஆர் 15 வெர்ஷன் 3.0 உட்பட புதிய பைக்குகளை காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு முன்னணி டீலர் ரூ.5000 முன்பணமாக பெற்றுக்கொண்டு ஆர்15 வி3.0 பைக்கிற்கு முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள டீலர்கள் விரைவில் முன்பதிவு தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
புதிய ஆர்15 மாடலில் மிக நேர்த்தியான இரட்டை பிரிவு எல்இடி ஹெட்லைட் , எல்இடி டெயில் லைட் மற்றும் சிறப்பான டிசைனிங் செய்யப்பட்ட பல்வேறு அம்சங்களுடன் முந்தைய மாடலை விட கூடுலாக 19 ஹெச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவை பெற்றுள்ளது.
இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஆர்15 வெர்ஷன் 3.0 மாடல் விலை ரூ.1.30 லட்சத்தில் தொடங்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…
கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…
கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…
டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…
ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…