எம்வி அகுஸ்டா பைக் நாளை இந்தியாவில் அறிமுகம்

வரும் மே 11 , 2016யில் அதிகாரவப்பூர்வமாக இத்தாலியின் எம்வி அகுஸ்டா சூப்பர் பைக்குகள் இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புரூடேல் 1090 , F3 800 மற்றும் F4 என மூன்று சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது.

எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக்கில் 144ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1078சிசி 4 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 112என்எம் ஆகும். இதில் 6வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

F3 800 பைக்கில் 148ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 798சிசி 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 88என்எம் ஆகும்.

கடந்த வருடத்தின் இறுதியில் விலை பட்டியலை வெளியிட்ட எம்வி அக்ஸ்டா நிறுவனம் முன்பதிவினை தொடங்கி சில பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இத்தாலியை சேர்ந்த MV அகுஸ்டா S.P.A நிறுவனம் இந்தியாவின் கைனெடிக் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் சூப்பர் பைக்குகள் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் , விற்பனை, சர்வீஸ் உதிரிபாகங்கள் மற்றும் டீலர்களை கைனெடிக் நிர்வகிக்கும். மோட்டார் ராயல் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் டீலர்கள் திறக்கப்பட உள்ளது.

எம்வி அகுஸ்டா பைக் விலை பட்டியல்

எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக் விலை ரூ.17.99 லட்சம்

ஃஎப்3 800 பைக் விலை – ரூ. 15.99 லட்சம்

ஃஎப்4 பைக் விலை – ரூ.25.99 லட்சம்

( அனைத்து எக்ஸ்ஷோரூம் புனே)

முதற்கட்டமாக முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள எம்வி அகுஸ்டா சூப்பர் பைக்குகள் படிப்படியாக உள்நாட்டிலே பாகங்களை தருவித்து ஒருங்கினைக்கப்பட உள்ளது.

எம்வி அகுஸ்டா சூப்பர் பைக் முழுவிபரம் நாளை வரும் இணைந்திருங்கள் << ஆட்டோமொபைல் தமிழன் >>

 

Share