Categories: Bike News

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

2023 TVS Apache RR 310

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு செப்டம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

சமீபத்தில் வெளியான அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கில் இருந்து பல்வேறு வசதிகளை பெற உள்ள இந்த புதிய மாடல் ஆனது புதுப்பிக்கப்பட்ட பல்வேறு நிறங்களும் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் கூட்டணி மூலம் உருவான என்ஜின் ஆப்ஷனில் மிக சிறப்பான வகையில் டியூன் செய்யப்பட்ட புதிய 313சிசி லிக்யூடு கூல்டூ எஞ்சின் அதிகபட்சமாக 35bhp அல்லது 40 bhp ஆக இருக்கலாம். மேலும் டார்க் 30Nm ஆக உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

ரைடிங் மோடுகளை பெற உள்ள இந்த மாடல் ஆனது புதிய டிஎஃப்டி கிளஸ்டரையும் பெறுவதுடன் பல்வேறு நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களும் டிவிஎஸ் மோட்டார் சேர்க்கலாம்.

சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் மட்டுமே எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மாடல் செப்டம்பர் 16ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் டீலர்கள் வாயிலாக தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருகின்றது. தற்பொழுது அப்பாச்சி RR 310R மாடல் விலை ரூபாய் 2.72 லட்சமாக கிடைக்கின்றது. புதிய மாடல் அனேகமாக ரூபாய் 2.80 லட்சத்திற்குள் வரக்கூடும் எனது பார்க்கப்படுகின்றது