போனிவில் அணிவரிசை பைக்குகளில் புதிய ட்ரையம்ப் போனிவில் டி100 பைக் ரூ.7.78 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. 2016 ஜெர்மனி இன்டர்மோட் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
முந்தைய மாடலை விட சில கூடுதலான புதிய வசதிகளை பெற்றுள்ள போனிவில் T100 பைக்கில் 55 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 900சிசி இன்ஜின் மற்றும் இதன் டார்க் 80 Nm ஆகும். இதில் 5வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 32.14 கிமீ ஆகும்.
கிளாசிக் வடிவமைப்பினை பெற்று பல நவீன நுட்ப வசதிகளை கொண்ட டி100 பைக்கில் இரட்டை வண்ண கலவையிலான நிறங்கள் , கிளாசிக் வடிவ டேங்க் , ஸ்போக்ட் வீல்ஸ் , ஏபிஎஸ் , டிராக்ஷ்ன் கன்ட்ரோல் , ரைட் பை திராட்டிள் , எல்இடி விளக்குகள் ,யூஎஸ்பி பவர் சாக்கெட் என பல வசதிகளை பெற்றுள்ளது.
150க்கு மேற்பட்ட துனைகருவிகளை கொண்டு ட்ரையம்ப் போனிவில் டி100 பைக்கில் உள்ள வண்ணங்கள் கருப்பு , ஆரஞ்சுடன் வெள்ளை நிறம் கலந்த இரட்டை கலவை , நீலத்துடன் கலந்த வெள்ளை நிறம் இரட்டை கலவை என மூன்று வண்ணங்களில் கிடைக்கும். ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விலை குறைந்த இரண்டாவது மாடலாக போனிவில் T100 விளங்குகின்றது. ட்ரையம்ப் டி100 பைக் ரூ.7.78 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)