Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ட்ரையம்ப் போனிவில் வரிசை பைக்குகள் விற்பனைக்கு வந்தது

by automobiletamilan
பிப்ரவரி 16, 2016
in பைக் செய்திகள்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ட்ரையம்ப் போனிவில் வரிசை பைக்குகளில் ஸ்டீரிட் ட்வீன் , T120 மற்றும் த்ரக்ஸ்டன் ஆர் என மூன்று பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

new-triumph-bonneville

கடந்த வருடத்தின் இறுதியில் 73வது EICMA கண்காட்சியில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரையம்ப் போனிவில்  ரேஞ்ச் பைக்குகள் தற்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில்  ட்ரையம்ப் ஸ்டீரிட் ட்வீன் , ட்ரையம்ப் T120 மாடல்களின் விலை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. த்ரக்ஸ்டன் R மாடல் விலை தாமதமாக அறிவிக்கப்பட உள்ளது. ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கன்ட்ரோல் அனைத்து மாடலிலும் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

ட்ரையம்ப் போனிவில்  விலை பட்டியல்

  1. ட்ரையம்ப் போனிவில் ஸ்டீரிட் ட்வீன் ; ரூ. 6.90 லட்சம்
  2. ட்ரையம்ப் போனிவில் T120 ; ரூ.8.70 லட்சம்

{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }

ட்ரையம்ப் ஸ்டீரிட் ட்வீன்

ஸ்டீரிட் ட்வீன் பைக்கில் 80NM டார்க்கினை வெளிப்படுத்தும் 900சிசி என்ஜின் பொருத்தப்பட்டடுள்ளது . முந்தைய மாடலை விட 18 சதவீத கூடுதலான டார்க் வழங்கும். மேலும் முந்தைய மாடலை விட 36 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

ரைட் பை வயர் , என்ஜின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் , FI போன்றவற்றை பெற்றிருக்கும். மேட் கருப்பு , ஜெட் கருப்பு , சில்வர் மற்றும் சிவப்பு என 4 வண்ணங்களுடன் மார்ச் முதல் வாரத்தில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

new-triumph-bonneville-street-twin

ட்ரையம்ப்  T120

T120 பைக்கில் 105என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 1200சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 54 சதவீத வரை டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு விதமான ரைடிங் மோட் ரெயின் மற்றும் ரோட் , இரட்டை டிஸ்க் பிரேக முன்பக்கத்தில் , வயர் ஸ்போக் வீல் , பியாசூட்டர் புகைப்போக்கி , சிலிப் அசிஸ்ட் கிளட்ச் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குள் , க்ரூஸ் கன்ட்ரோல் ,   யூஎஸ்பி சாக்கெட் , என்ஜின் இம்மொபைல்சர் போன்ற வசதிகளை போனிவில் T120 பெற்றுள்ளது.

சிவப்பு , கருப்பு , சில்வர் , சிவப்பு , ஜெட் கருப்பு ,  வெள்ளை போன்ற வண்ணங்களில் கிடைக்கும். ஏப்ரல் மத்தியில் டெலிவரி தொடங்க உள்ளது.

 

ட்ரையம்ப் த்ரக்ஸ்டன் R

ட்ரையம்ப் போனிவில் T120 பைக்கில் இருந்து சற்று கூடுதலான வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பான பியராலோ டிப்போலோ ரோஸா டயர் அலுமினிய ஸ்வின்கிராம் , புகைப்போக்கில் பிரஸ்டூ ஸ்ட்யின்லெஸ் ஸ்டீல் போன்றவை ஆகும்.

த்ரக்ஸ்டன் பைக்கில் 112என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும்  1200சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 62 சதவீத வரை டார்க் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Tags: Triumph
Previous Post

பினின்ஃபரினா கான்செப்ட் டீஸர் – ஜெனிவா மோட்டார் ஷோ

Next Post

டிவிஎஸ் மோட்டார்ஸ் மொபைல் ஆப் அறிமுகம்

Next Post

டிவிஎஸ் மோட்டார்ஸ் மொபைல் ஆப் அறிமுகம்

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version