Categories: Bike News

பஜாஜ் வி15 பைக் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டல் பாகங்களில் உருவாக்கப்பட்டுள்ள பஜாஜ் வி15 பைக் பற்றி முக்கிய விபரங்கள் மற்றும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. பஜாஜ் வி15 பைக் விலை ரூ.70,000 இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

bajaj-v15-bike

பஜாஜ் V15 முக்கிய விபரங்கள் ;

  1. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய வி15 பைக் கிளாசிக் டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  2. ஐஎன்எஸ் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் மெட்டல் பாகத்திலிருந்து பெட்ரோல் டேங் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.
  3. கஃபே ரேஸர் மற்றும் க்ரூஸர் பைக்குகளின் வடிவ தாத்பரியத்தின் கலவையில் நியோ – கிளாசிக் டிசைன் என பஜாஜ் ஆட்டோவால் அழைக்கப்படுகின்றது.
  4. பஜாஜ் வி15 பைக் ஆன்ரோடு விலை ரூ.68,000 முதல் ரூ.70,000 வரையிலான விலையில் இருக்கலாம்.
  5. பஜாஜ்  V15 பைக்கிற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்கள் வாயிலாகவும் முன்பதிவு நடைபெறுகின்றது.
  6. 12 PS ஆற்றலை வழங்கும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 13 Nm ஆகும்.
  7. பஜாஜ் வி15 பைக் மைலேஜ் லிட்டருக்கு 60 கிமீ வரலாம் என தெரிகின்றது.
  8. 33மிமீ அகலம் கொண்ட முன்பக்க ஃபோர்க்குகள் மற்றும் பின்புறம் இரு சாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது.
  9. மற்ற 150சிசி பைக்குகளை விட 60 சதவீத கூடுதல் வெளிச்சம் தரவல்ல 60 W முகப்பு விளக்கினை பெற்றுள்ளது.
  10. முன்பக்கம் 18 இஞ்ச் வீல் பின்புறம் 16 இஞ்ச் வீல் ஆகும்.
  11. பின்புற இருக்கையை ஒற்றை மற்றும் இருவர் அமரும் இருக்கையாக மாற்றிக்கொள்ளலாம்.
  12. வரும் மார்ச் மத்தியில் டெலிவரி தொடங்கப்படலாம்.

பஜாஜ் V15 பைக் படங்கள்

[envira-gallery id=”5741″]

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

14 hours ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

14 hours ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

15 hours ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

16 hours ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

1 day ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

1 day ago