புதிய தோற்றத்தில் ஹோண்டா ட்ரீம் யுகா , நியோ, சிபி ஷைன் , மற்றும் டியோ பைக்குகள் விற்பனைக்கு ஹோண்டா இந்தியா பைக் பிரிவு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

ட்ரீம் யுகா

1. ட்ரீம் யுகா மற்றும் நியோ

ஹோண்டாவின் விலை குறைந்த பைக்கான ட்ரீம் யுகா பைக்கில் புதிய பாடி கிராஃபிக்ஸ், பக்கவாட்டு பேனல் மற்றும் வண்ணங்களை பெற்றுள்ளது. அவை கருப்பு , சிகப்பு மற்றும் கிரே ஆகும்.
ட்ரீம் சீரிஸ்களில் உள்ள நியோ பைக்கிலும் பாடி தோற்றம், லாக் செய்யும் வசதியுடன் கூடிய பக்கவாட்டு கவுல் பேனல்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் டீலர்களிடம் கிடைக்க பெறும்.

2. சிபி ஷைன்

ஹோண்டாவின் 125சிசி பைக்கில் புதிய கிராஃபிக்ஸ், பக்கவாட்டு பேனல், பின்புற விளக்குகள், வைசர் மற்றும் டேங் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. எச்இடி நுட்பத்தின் மூலம் அதிகப்படியான மைலேஜ் கிடைக்கும். மேலும் காம்பி பிரேக் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. 

3. ஹோண்டா டியோ


ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் கிராஃபிக்ஸ் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க; ஹோண்டா ஆக்டிவா 3ஜி ஸ்கூட்டர் விபரம்