Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

யமஹா பி.எஸ் 4 பைக்குகளின் விலை பட்டியல் விபரம்

by automobiletamilan
March 31, 2017
in பைக் செய்திகள்

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனத்தின் பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட பை5கு மற்றும் ஸ்கூட்டர்களின் விலை பட்டியல் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யமஹா பி.எஸ் 4

  • தோற்றம் மற்றும் ஆற்றல் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை
  • அனைத்து யமஹா மாடல்களிலும் ஏஎச்ஓ நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.
  • சிறிய அளவிலான விலை உயர்வினை சந்தித்துள்ளது.

 

சமீபத்தில் விற்பனைக்கு வந்த 250சிசி யமஹா FZ25 பைக் பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற யமஹா மாடல்கள் அனைத்தும் பிஎஸ் 4 எஞ்சினுக்கு மாற்றப்பட்டுள்ளது.

யமஹாவின் FZ, FZ-S, ஃபேஸர் மற்றும் SZ RR , மேலும் ஸ்கூட்டர் வரிசை மாடல்களான பேசினோ மற்றும் சிக்னஸ் ஆல்பா என அனைத்து மாடல்களும் பிஎஸ் 4 தரத்துக்கு மாறியுள்ளது.  மேலும் தொடர்ந்து ஒளிரும் தன்மை பெற்ற ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் சேர்க்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் அனைவருமே பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில் இறுதியாக யமஹா நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

யமஹா மாடல்கள் விலை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)
FZ-S ரூ. 82,789
FZ ரூ. 80,726
ஃபேஸர் ரூ. 87,935
SZ ரூ.67,694
ஃபேசினோ ரூ. 54,330
சிக்னஸ் ஆல்ஃபா (Disc) ரூ. 54,586
சிக்னஸ் ஆல்ஃபா (STD) ரூ.51,369 (automobiletamilan)

இருப்பில் உள்ள அனைத்து பி.எஸ் 3 வாகனங்களுக்கும் பல்வேறு சலுகைகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. குறிப்பாக ஹோண்டா நிறுவனம் அதிகபட்சமாக ரூ.22,000 வரையும் , பரிமியம் ரக பைக்குகளுக்கு ரூ. 3 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிங்க – பிஎஸ் 3 சலுகைகள் மற்றும் விபரம்

Tags: FZ25Yamahaஃபேசினோ
Previous Post

நெக்ஸா ஷோரூமில் மாருதி சியாஸ் விற்பனை செய்யப்படும்

Next Post

ஹோண்டா நவி சென்னை ஆன்ரோடு விலை 29,500 மட்டுமே : பி.எஸ் 3 சலுகைகள் – updated

Next Post

ஹோண்டா நவி சென்னை ஆன்ரோடு விலை 29,500 மட்டுமே : பி.எஸ் 3 சலுகைகள் - updated

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version