No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

மீண்டும் பஜாஜ் பல்சர் 200 NS விரைவில்

  • By MR.Durai
  • 9 years Ago
ShareTweetSend

இந்திய சந்தையில் இருந்து நீக்கப்பட்ட பஜாஜ் பல்சர் 200 NS ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. அடுத்த சில நாட்களில் முறைப்படி பல்சர் 200 என்எஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மத்தியில் விற்பனைக்கு வந்த பல்சர் 200 ஏஎஸ் மாடலின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலே என்எஸ் 200 (Naked Sport) மாடல் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகின்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் 150சிசி க்கு மேற்பட்ட சந்தை மதிப்பில் தன்னை முழுமையாக நிலை நிறுத்திகொள்ள பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு வருகின்றது.

பல்சர் என்எஸ் 200 எஞ்சின்

துருக்கியில் நடைபெற்ற டீலர்கள் சந்திப்பில் பல்சர் 160என்எஸ் மாடல் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்ஸர் 200என்எஸ் பைக்கும் புதிய டியூவல் டோன் வண்ணத்தில் முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலே கூடுதலாக என்ஜின் கார்டு மட்டுமே பெற்றுள்ள மாடலாக காட்சிக்கு வந்துள்ளது. பல்சர் NS200  பைக்கில் 23.1 குதிரைசக்தி (24 பிஹெச்பி துருக்கி மாடல் ) வெளிப்படுத்தும் 199.5சிசி டிரிப்ள்-ஸ்பார்க் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.3 நியூட்டன் மீட்டர் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் மாடலாகும்.

விற்பனையில் இருந்து வருகின்ற பல்சர் 200 ஏஎஸ் மற்றும் 150 ஏஎஸ் மாடல்களின் உற்பத்தியை குறைக்கவோ அல்லது மாடலை நீக்கவோ பஜாஜ்  திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிப்பதனால் வருகின்ற 2017 ஆம் ஆண்டின் ஜனவரி மாத இறுதிக்குள் மீண்டும் பஜாஜ் பல்சர் 200NS இந்தியாவிலும் வரவுள்ளது.

பஜாஜ் பல்சர் 200 NS படங்கள்

மேலும் முழுமையாக 15 பல்சர் 200 என்எஸ் படங்களையும் காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…

Automobile Tamilan

 

 

  • Categories: Bike News
  • Tags: Bajaj

Related Content

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

By நிவின் கார்த்தி 6,December 2025

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் 'அகோண்டா' வெளியானது

By நிவின் கார்த்தி 6,December 2025

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

By நிவின் கார்த்தி 5,December 2025

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

By நிவின் கார்த்தி 1,December 2025

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

By நிவின் கார்த்தி 23,November 2025

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

By MR.Durai 22,November 2025

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

By நிவின் கார்த்தி 21,November 2025

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

By ராஜா 17,November 2025

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

By நிவின் கார்த்தி 26,November 2025

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

By ராஜா 11,November 2025
Back to top

2025 - Automobile Tamilan

Exit mobile version