Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
14 July 2016, 1:33 pm
in Bike News
0
ShareTweetSend

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக் ரூ.53700 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான டார்க் ஆன் டிமானட் பிஎஸ்4 இஞ்ஜினை ஐஸ்மார்ட் 110 பைக் பெற்றுள்ளது.

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் 9.4 PS @7500 rpm ஆற்றல் மற்றும் 9Nm @ 5500 rpm டார்க் வழங்கும் 110cc ஏர் கூல்டு 4 ஸ்டோர்க் டார்க் ஆன் டிமான்ட் (TOD -Torque on Demand ) பிஎஸ்-4 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக் 0 முதல் 60 கிமீ வேகம் எட்டுவதற்கு 7.45 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ஐஸ்மார்ட் 110 பைக் வேகம் மணிக்கு 87 கிமீ ஆகும்.

இந்த பைக்கில் ஹீரோ நிறுவனத்தின் i3S (Idle Stop and Start System ) நுட்பத்தினை பயன்படுத்தி சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு சராசரியாக 68 கிமீ வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐஸ்மார்ட் நுட்பத்தினை பெற்ற இரண்டாவது மாடலாக வந்துள்ள ஐஸ்மார்ட் 110 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் மற்றும் பின்புறத்தில் ஸ்விங்கிராம் அட்ஜெஸ்டபிள் ஷாக் அப்சார்பரை பெற்று விளங்குகின்றது.

முன்பக்க டயரில் 130மிமீ மற்றும் பின்பக்க டயரில் 110 மிமீ டிரம் பிரேக்கினை பெற்றுள்ளது. அனலாக் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் சைட்ஸ்டேன்ட் இன்டிகேட்டர் போன்றவற்றை பெற்றுள்ளது.

முதன் முறையாக ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 பைக்கில் ஆட்டோ ஹெட்லேம்ப் வசதியை பெற்றுள்ளது அதாவது குறைவான வெளிச்சம் உள்ள இடங்களில் தானாகவே முகப்பு விளக்கு எரிய தொடங்கும். மேலும் 110சிசி பிரிவில் பிஎஸ்4 மாசு உமிழ்வினை பெற்ற ஒரே என்ஜினாகும்.

ஸ்போர்ட்ஸ்ரெட் ,நீலம் மற்றும் கருப்பு , சிவப்பு மற்றும் கருப்பு மற்றும் சில்வர் பிளாக் என மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கும்.

 

ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 விலை விபரம் 

 

ஹீரோ ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட் 110 விலை ரூ. 53,700 ( சென்னை எக்ஸ்ஷோரும் )

மற்றவை

ரூ.53,300 (Ex-showroom Delhi), ரூ. 53,100 (Ex-showroom Mumbai), ரூ. 53,800 (Ex-showroom Bangalore), ,ரூ.54,200 (Ex-showroom Kolkata), ரூ. 53,100 (Ex-showroom Pune), ரூ. 54,100 (Ex-showroom Hyderabad). 

டிவிஎஸ் விக்டர் 110 ,ஹோண்டா லிவோ மற்றும் யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக அமைந்துள்ள ஐஸ்மார்ட் பைக் மிக நேர்த்தியான புதிய ஹீரோ நிறுவன வடிவ தாத்பரியங்களை பெற்றுவிளங்குகின்றது.

Related Motor News

6.87 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப்

செப்டம்பரில் புதிய ஹீரோ கிளாமர் 125 க்ரூஸ் கண்ட்ரோலுடன் அறிமுகம்

அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பற்றி முக்கிய சிறப்புகள்

ஸ்போர்ட்டிவான ஹீரோ கரீஸ்மா XMR 250 அறிமுகமானது

ஸ்டைலிஷான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 250R அறிமுகமானது

சக்திவாய்ந்த அட்வென்ச்சர் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக் வெளியானது..!

Tags: Hero Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan