ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கிளாமர் X 125 மாடலில் மிக நவீனத்துவமான க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் ரைடிங் மோடுகள், டிஎஃப்டி கிளஸ்ட்டர் என பலவற்றை பெற்று போட்டியாளர்களான ஹோண்டா SP125, பல்சர் N125, மற்றும் டிவிஎஸ் ரைடர் 125 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது.
இதுதவிர மற்ற 125சிசி போட்டியாளர்களான ஹோண்டா ஷைன் 125, ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர், பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி போன்ற மாடல்கள் ரூ.85,000 முதல் ரூ.1,00,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் அமைந்துள்ளது. சற்று கூடுதலான வசதிகளை பெற்ற சிபி 125 ஹார்னெட், பல்சர் என்எஸ் 125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் போன்றவற்றுடன் போட்டியிடுகின்றது.
அம்சம் | Hero Glamour X | TVS Raider 125 | Honda SP 125 | Bajaj Pulsar N125 |
---|---|---|---|---|
எஞ்சின் | 124.7cc, air-cooled, FI | 124.8cc, air & oil-cooled, FI | 123.9cc, air-cooled, FI | 124.4cc, air-cooled, FI |
பவர் | 11.4 bhp @ 8,250 rpm | 11.2 bhp @ 7,500 rpm | 10.7 bhp @ 7,500 rpm | 11.6 bhp @ 8,500 rpm |
டார்க் | 10.4 Nm @ 6,000 rpm | 11.2 Nm @ 6,000 rpm | 10.9 Nm @ 6,000 rpm | 10.8 Nm @ 6,500 rpm |
கியர்பாக்ஸ் | 5-speed | 5-speed | 5-speed | 5-speed |
மைலேஜ் (ARAI) | 65 kmpl | 56–60 kmpl | 65 kmpl | 55–60 kmpl |
எடை | 122 kg | 123 kg | 116 kg | 140 kg |
பிரேக் | Disc/Drum (CBS) | Disc/Drum (CBS) | Disc/Drum (CBS) | Disc/Drum (CBS) |
சஸ்பென்ஷன் | டெலிஸ்கோபிக் / ட்வீன் ஷாக் அப்சார்பர் | டெலிஸ்கோபிக் / மோனோ ஷாக் அப்சார்பர் | டெலிஸ்கோபிக் / ட்வீன் ஷாக் அப்சார்பர் | டெலிஸ்கோபிக் / மோனோ ஷாக் அப்சார்பர் |
வசதிகள் | LED ஹெட்லைட், டிஜிட்டல் மீட்டர், i3s,ரைடிங் மோட், க்ரூஸ் கண்ட்ரோல், ரைட் பை வயர், யூஎஸ்பி சார்ஜிங் | LED DRL, டிஜிட்டல் மீட்டர், ரைடிங் மோட், USB சார்ஜிங், ஸ்டார்ட்ஸ்டாப் சிஸ்டம் | முழு டிஜிட்டல் மீட்டர், LED ஹெட்லைட், சைலன்ட் ஸ்டார்ட் | டிஜிட்டல் மீட்டர், ஸ்போர்ட்டி ஸ்டைல் |
விலை (எக்ஸ்-ஷோரூம்) | ₹91,999– ₹99,999 | ₹90,913 – ₹1,05,513 | ₹96,086-₹1,00,999 | ₹95,437 – ₹1,01,498 |
குறிப்பாக 4 மாடல்களிலும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உட்பட கூடுதலான வசதிகள், எல்இடி ஹெட்லைட் என பலவற்றுடன் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் என பலவற்றுடன் வந்துள்ளது.
குறிப்பாக, ஹீரோ கிளாமர் எக்ஸ் மாடலில் உள்ள குறைந்த பேட்டரி உள்ள சமயங்களில் கிக் ஸ்டார்டரை பயன்படுத்தி ஸ்டார்ட் செய்யும் வகையிலான சொலினாய்டு ஸ்மார்ட் பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, AERA நுட்பத்துடன் கூடிய ரைட் பை வயருடன் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்றதாக அமைந்துள்ளது. Eco, Road and Power ரைடிங் மோடுகள் பெற்றுள்ளது. ரைடர் 125யில் பூஸ்ட், ஈக்கோ மற்றும் பவர் ஆகியவற்றை பெற்றுள்ளது.
ரூ.1 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் க்ரூஸ் கட்டுப்பாடு ரைடிங் மோடுகள் என பலவற்றை கொண்டதாக கிளாமர் எக்ஸ் உள்ளது.