Site icon Automobile Tamilan

2017 கேடிஎம் டியூக் பைக்குகள் வரிசை வருகை விபரம்

வருகின்ற பிப்ரவரி 23ந் தேதி கேடிஎம் டியூக் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. பல்வேறு புதிய வசதிகளை கொண்ட 2017 கேடிஎம் 390 டியூக் மற்றும் புதிய கேடிஎம் 200 டியூக் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.

2017 கேடிஎம் டியூக்

சில வாரங்களுக்கு முன்னதாக கூடுதலான வசதிகளை கொண்ட 2017 கேடிஎம் ஆர்சி வரிசை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய டியூக் வரிசையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கடந்த இஐசிஎம்ஏ 2016 அரங்கில் வெளிவந்த 2017 390 டியூக் பைக்கில் முகப்பில் இரட்டை பிரிவுகளை முழு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெட்ரோல் டேங்க் மற்றும் டிசைன் வடிவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வந்துள்ள நிலையில் முகப்பில் இரட்டை பிரிவுகளை முழு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெட்ரோல் டேங்க் மற்றும் டிசைன் வடிவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 390 பைக்கில் டிஎஃப்டி திரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரில் ஸ்மார்ட்போன் ஆதரவு மற்றும் மைரைட் மல்டிமீடியா தொடர்பு , ரைட் பை வயர் டெக் ,சிலிப்பர் கிளட்ச் மற்றும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக பெற்று மேலும் பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக இருக்கும்.

விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான விலையில் வரவுள்ள இரு மாடல்களின் விலை மற்றும் மேலும் பல விபரங்கள் பிப்ரவரி 23ல் வெளிவரவுள்ளது.

 

Exit mobile version