வருகின்ற ஜூலை 19ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள பி.எம்.டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் 2019 பி.எம்.டபிள்யூ G 310 R பைக் புதிய நிறத்தை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக சிவப்பு நிறம் மற்றும் வெள்ளை நிறத்தில் HP ஸ்டிக்கரிங் பெற்று , நீல நிறம் நீக்கப்பட்டு கருப்பு நிறம் தொடர்ந்து சந்தையில் கிடைக்கும். மற்றபடி மெக்கானிக்கல் ரீதியாக எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் பி.எம்.டபிள்யூ மோட்டார்டு கூட்டணியில் உருவாக்கப்பட்ட முதல் மாடலான பி.எம்.டபிள்யூ ஜி 310 ஆர் பைக் 250சிசி முதல் 350 சிசி வரையிலான சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள நிலையில், ஓசூரில் அமைந்துள்ள டிவிஎஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
அதிகபட்சமாக 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் திரவத்தால் குளிர்விக்கப்படும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைத் திறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரிமியம் ரக மாடல்களில் விலை குறைந்த நேக்டு ஸ்போர்ட்டிவ் ரக மாடலாக விளங்க உள்ள ஜி 310 ஆர் பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், முழு டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோல், யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்றிருக்கும்.
இதைத் தவிர அட்வென்ச்சர் ரக மாடலாக விளங்கும் பி.எம்.டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் பைக் ஜி 310ஆருடன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. பி.எம்.டபிள்யூ G 310 R பைக் விலை ரூ. 3.50 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.