Site icon Automobile Tamilan

ஸ்டைலிங் அப்டேட் மற்றும் கார்னரிங் ABS களுடன் வெளியானது 2019 டுகாட்டி ஸ்க்ராம்பலர்

ஸ்க்ராம்பலர்1100 அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், இத்தாலி நாட்டை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி, 2019 ஸ்க்ராம்பலர்களில் புதிய அப்டேட்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை ஸ்க்ராம்பலர்களில் எலெக்ட்ரானிக் ரைடிங் வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை, ஸ்க்ராம்பலர் 800, மோட்டார் சைக்கிள்களில் இந்த வசதி கொண்டு வர சில டிசைன்களை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

2019 டுகாட்டி ஸ்க்ராம்பலர்களின் காஸ்மெடிக் மாற்றங்களாக, புதிய பெயின்ட் ஆப்சன்கள் உள்ளன. புதிய LED DRL செட்டப் உடன் கூடிய ஹெலட்லைட் மற்றும் இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. புதிய அலுமினியம் சைட் டேங்க் பேனல்கள் முந்தைய மோட்டார் சைக்கிள்களில் இருந்ததை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பொறுத்தவரை, எலெக்ட்ரானிக் வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 2019 டுகாட்டி ஸ்க்ராம்பலர்களில் கார்னரிங் ABS மற்றும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய ஹைட்ராலிக் கிளாட்ச்களும் பொருத்தப்பட உள்ளது. மேம்படுத்தப்பட்ட சஸ்பென்சன்கள் மட்டுமின்றி சீட் பேட்களையும் கொண்டுள்ளது.

2019 டுகாட்டி ஸ்க்ராம்பலர் 800 மோட்டார் சைக்கிள், 830cc, ஏர்-கூல்டு, L-டூவின் மோட்டார்களை கொண்டுள்ளது. இவை 74PS ஆற்றலுடனும், 8250rpm மற்றும் 5750rpm-ல் 67Nm டார்க்யூவையும் கொண்டிருக்கும்,. இவை 6-ஸ்பீடு டிரான்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களில் டுயுப்லர் ஸ்டீல் டிர்லிகளுடன் கூடிய பிரேம் 41mm அப்-சைட்-டவுன் கயாபா போரக்ஸ் முன்புறத்திலும் சைடு மோனோஷாக்கள் பின்புறத்தில் பொருத்தப்பட்டு, பிரிலோடு மற்றும் ரீபவுன்ட்களுக்கு எற்ற வகையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையில் உள்ளது.

டுகாட்டி மோட்டார் சைக்கிள்களில் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்சன் செட்டாப் இருக்கும் என்ற தெரிய வந்துள்ள போது, இதுகுறித்து ஸ்பெக்கில் குறிப்பிடப்பட்டவில்லை. பிரேக்கை பொறுத்தவரை, 330mm டிஸ்க்களுடன் 4-பிஸ்டன் காலிப்பர் முன்புறமும், சிங்கிள் 240mm ரியர் டிஸ்க் பிரேக், 10-ஸ்பாக் மிஷன் அலாய் வீல்கள் பிர்லி MT 110/80 R18 முன்புறமும், 180/55 R17 பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

2019 டுகாட்டி ஸ்க்ராம்பலர் 800 மோட்டார் சைக்கிள்களின் விலை குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்ற போதும், இது மிகவும் ‘fun per buck’ மோட்டார் சைக்கிளாக இருக்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், கவர்ந்திழுக்கும் டிசைன்கள், பாதுகாப்புக்காக கார்னரிங் ABS பொருத்தப்பட்டுள்ளது.

2019 டுகாட்டி ஸ்க்ராம்பலர் 800 மோட்டார் சைக்கிள்களின் விற்பனை வரும் நவம்பர் மாதம் முதல் சர்வதேச அளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதும் இந்தியாவில் இந்த மோட்டார் சைக்கிள்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை என்றாலும் இந்த அறிமுகம் நவம்பரில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version