2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 விற்பனைக்கு வந்தது

tvs apache rr310

சிலிப்பர் கிளட்ச் வசதியை கூடுதலாக பெற்ற 2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் ரூ.2.27 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.3,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய மாடலில் பாண்டம் பிளாக் எனற நிறம் கூடுதலாக இணைக்கப்பட்டு சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மாற்றங்களை பெற்றதாக அமைந்துள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310

வளைவான இடங்களில் மற்றும் வேகத்தை விரைவாக குறைக்கும்போது கியரினை குறைப்பதனால் ஏற்படுகின்ற பின்புற வீல் பூட்டிக் கொள்வதனை கிளட்ச் தடுமாற்றத்தை தவிர்க்கும் நோக்கில் மேம்படுப்பட்ட மாடலில் சிலிப்பர் கிளட்ச் வசதி அடிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்பாட்டில் உள்ள வாகனங்களிலும் சிலிப்பர் கிளட்ச் நுட்பத்தினை இணைக்க இயலும் என குறிப்பிடப்படுள்ளது.

அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் 313 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 34 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் இடம்பெற்றிருக்கின்றது.

கருப்பு நிறம் புதிதாக இணைக்கப்பட்டு, புதிய பாடி கிராபிக்ஸ் சிவப்பு நிறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட புதிய மாடல் விலை ரூபாய் 3,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2019 அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலின் முதல் பைக்கினை எம்.எஸ் தோனி டெலிவரி பெற்றுள்ளார்.

 

Exit mobile version