செய்திகள்

₹ 1.18 லட்சத்தில் பஜாஜ் பல்சர் N150 விற்பனைக்கு வெளியானது

பல்சர் N160 பைக்கின் ஸ்டைலை பின்பற்றி புதிய பஜாஜ் பல்சர் N150 பைக் மாடல் விற்பனைக்கு ரூ.1.18 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, விற்பனையில் இருந்த பல்சர் பி150 பைக் நீக்கப்பட்டுள்ளது. என்ஜின் மற்றும் பிற மெக்கானிக்கல் அம்சங்கள் பெறுகிறது.

Bajaj Pulsar N150

N160 பைக்கின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலிங் நேரடியாக பகிர்ந்து கொள்ளுகின்ற புதிய பல்சர் N150 பைக்கில் 150cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.5hp பவர் மற்றும் 13.5Nm டார்க் வெளிப்படுத்தும் இதில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பெறுகிறது.

முன்பக்க டிஸ்க் பிரேக், ரியர் டிரம் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் என ஒரே வேரியண்டில் மட்டும் என்160 பைக் வெளியிடப்பட்டுள்ளது. ரேசிங் ரெட், எபோனி பிளாக் மற்றும் மெட்டாலிக் பேர்ல் ஒயிட் என மூன்று நிறங்கள் பெறுகிறது.

ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வெளிப்படுத்துகிற புராஜெக்டர் ஹெட்லைட், நேர்த்தியான பெட்ரோல் டேங்க் எக்ஸ்டென்சன் கொண்டு செமி டிஜிட்டல் கிளஸ்டர் பெற்றதாக அமைந்துள்ளது.

தற்பொழுது முன்பதிவு டீலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  பஜாஜ் பல்சர் N150 விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Share