2023 பஜாஜ் பல்சர் NS160 Vs பல்சர் N160 : சிறப்புகள், விலை

2023 bajaj pulsar ns160 vs pulsar n160

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற பஜாஜ் பல்சர் NS160 பைக்கிற்கு எதிராக பல்சர் N160 பைக் என இரண்டினையும் ஒப்பீடு செய்து எந்த பைக் வாங்கலாம் என்பதனை பல்வேறு வித்தியாசங்கள் மற்றும் சிறப்புகள், விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

இரண்டு பைக்குகளும் ஒரே 160சிசி என்ஜின் பிரிவில் அமைந்திருந்தாலும் மாறுபட்ட பல்வேறு வசதிகளை கொண்டு வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற அம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக என்எஸ் 160 ஸ்டைலிஷான பல்வேறு அம்சங்களுடன் சற்று பிரீமியம் பாகங்களை பெற்றுள்ளது.

2023 Bajaj Pulsar NS160 vs Pulsar N160

பல்சர் N160 பைக்கிற்கு எதிராக அமைந்துள்ள பல்சர் NS160 பைக் என இரண்டிலும் மாறுபட்ட என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு பைக்கின் பொதுவாக 5 வேக கியர்பாக்ஸ் பெற்றாலும், பவர் மற்றும் டார்க் விபரங்களில் மாறுபடுகின்றது. அவற்றை கீழுள்ள அட்டவணையில் காணலாம்.

Specs Pulsar NS160 Pulsar N160
என்ஜின் 160.3cc single-cylinder, oil-cooled, fuel-injected 164.82cc, single-cylinder, oil-cooled, fuel-injected
கியர்பாக்ஸ் 5-speed 5-speed
பவர் 16.9 bhp at 9000 rpm 15.7 bhp at 8750 rpm
டார்க் 14.6 Nm at 7250 rpm 14.65 Nm at 6750 rpm

அதிகபட்சமாக 16.9 bhp பவரை வழங்கும் 160.3cc என்ஜின் பெற்ற மாடலாக பல்சர் என்எஸ் 160 பைக் விளங்குகின்றது.

அடுத்து, பல்சர் NS160 பைக்கில் சற்று முந்தைய வடிவமைப்பு மொழியை பஜாஜ் பயன்படுத்தி வருகின்றது. ஆனால் பல்சர் என்160 மாடலில் மிக நேர்த்தி ஸ்ட்ரீட் ஃபைட்டர் வடிமைப்பினை கொடுத்து வழங்க்கமான ஹாலஜென் விளக்கு வழங்கப்படாமல் எல்இடி புராஜெக்டர் விளக்குடன் எல்இடி ரன்னிங் விளக்குகளும் உள்ளது.

பல்சர் NS 160 Vs பல்சர் N160 – சிறப்பம்சங்கள்

ஸ்டைலிங் அமைப்பில் பல்சர் NS160 மாடலை விட N160 சற்று சிறப்பாக உள்ளது, கூடுதலாக புதிய 2023 பல்சர் NS160 பைக்கில் பேர்ல் மெட்டாலிக் ஒயிட் மற்றும் எபோனி பிளாக் என இரண்டு நிறங்களில் மட்டுமே கிடைக்கிறது. மறுபுறம், பஜாஜ் பல்சர் N160 பைக்கிற்க்கு புரூக்ளின் பிளாக், டெக்னோ கிரே, ரேசிங் ரெட் மற்றும் கரீபியன் ப்ளூ என நான்கு நிறங்கள் உள்ளன.

Pulsar NS160 Pulsar N160
வீல்பேஸ் 1372mm 1358mm
இருக்கை உயரம் 805mm 795mm
கிரவுண்ட்
கிளியரண்ஸ்
170mm 165mm
எரிபொருள் டேங்க் 12 litres 14 litres
Kerb weight 152 kg 154kg
சஸ்பென்ஷன் (F/R) USD Fork /  Nitrox Monoshock Telescopic 37mm or 31mm / Monoshock
பிரேக் (F/R) 300mm Disc/ 230mm Disc

(Dual channel ABS)

300mm or 280 mm Disc / 230mm Disc

(Dual channel ABS or Single Channel ABS)

டயர் (F/R) 100/80-17 (F) / 130/70-17 (R) 100/80-17 (F) / 130/70-17 (R)

 

குறிப்பாக மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் மேலே உள்ள அட்டவணையில் முக்கிய விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பல்சர் NS160 பைக் மாடல் சிறப்பான அப் சைடு டவுன் ஃபோர்க் முன்புறத்தில் பெற்றுள்ளது. ஆனால் N160 மாடல் 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர் உள்ளது. இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு பிரேக்கிங் திறனுக்கு இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக என்160 விலை குறைவான வேரியண்ட் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.

பல்சர் N160 முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், கடிகாரம், எரிபொருள் சிக்கனம் மற்றும் எரிபொருள் இருப்பின் ரேஞ்சு மற்றும் எல்இடி லைட்டிங் சிஸ்டத்தைப் பெறுவதுடன் யூஎஸ்பி சார்ஜிங் வசதியும் உள்ளது.

பல்சரின் NS160 மாடலில் செமி டிஜிட்டல் கன்சோல் பெற்று கியர் பொசிஷன் இன்டிகேட்டர், மற்றும் எரிபொருள் இருப்பின் ரேஞ்சு மட்டும் காட்டுகின்றது.

2023 Bajaj Pulsar NS160 vs Pulsar N160 – விலை

பல்சர் NS160 மற்றும் பல்சர் N160 என இரு மாடல்களின் பல்வேறு வித்தியாசங்களை கொண்டிருப்பதனை அறிந்து கொண்டுள்ளோம். அடுத்து விலையை பற்றி அறிந்து கொள்ளலாம்.

Model Price (ex-showroom chennai)
Pulsar NS160 ₹ 1,34,803
Pulsar N160 ₹ 1,22,903 – ₹ 1,29,773

பஜாஜ் பல்சர் NS160 மற்றும் பஜாஜ் பல்சர் N160 போட்டியாளர்களைப் பொறுத்தவரை, சுசூகி ஜிக்ஸர், யமஹா FZ-S V4, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R போன்றவை உள்ளன.

2023 பஜாஜ் பல்சர் NS160 பைக் ஆன்ரோடு விலை எவ்வளவு ?

டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்ற 2023 பஜாஜ் பல்சர் NS160 பைக் ஆன்ரோடு விலை ₹ 1,62,440

2023 பஜாஜ் பல்சர் N160 பைக் ஆன்ரோடு விலை எவ்வளவு ?

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் 2023 பஜாஜ் பல்சர் NS160 விலை ₹ 1,49,424 மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ₹ 1,57,057

Exit mobile version