Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

குறைந்த விலை கேடிஎம் 390 அன்வென்ச்சர் X விற்பனைக்கு வந்தது

by MR.Durai
14 April 2023, 11:17 am
in Bike News
0
ShareTweetSend

ktm 390 adventure

ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் விற்பனையில் உள்ள 390 அட்வென்ச்சர் மாடலின் அடிப்படையில் ரூ.58,000 குறைவான விலையில் ₹ 2.80 லட்சத்தில் 390 அட்வென்ச்சர் X என்ற வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

விலையை குறைப்பதற்காக இந்த மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், க்விக் ஷிஃப்டர் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் போன்ற வசதிகளை நீக்கியுள்ளது. மற்றபடி பெரும்பாலான வசதிகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.

2023 KTM 390 Adventure X

கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கில் தொடர்ந்து  373.2cc லிக்யூடு-கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டு 43.5 hp குதிரைத்திறன் மற்றும் 37 Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.

குறிப்பாக விற்பனையில் உள்ள மாடலை விட குறைந்த விலைக்கு கொண்டு வரும் நோக்கில், டிராக்‌ஷன் கண்ட்ரோல், க்விக் ஷிஃப்டர் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் போன்ற வசதிகள் நீக்கப்பட்டாலும் டூயல் சேனல் ஏபிஎஸ் இடம்பெற்றுள்ளது.

மற்ற அம்சங்களில், 19-இன்ச் முன்புற அலாய் வீல் மற்றும் 17-இன்ச் பின்புற அலாய் வீல், முன்புறத்தில் WP அபெக்ஸ் 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் WP அபெக்ஸ் மோனோ-ஷாக் ஆனது 10 ஸ்டெப் முறையில் ரைடருக்கு ஏற்ப சரிசெய்யக்கூடியதாக விளங்குகின்றது.

கேடிஎம் புளூடூத் ஆதரவினை வழங்கும் கலர்-டிஎஃப்டி டிஸ்ப்ளேவை வைத்திருக்கிறதா அல்லது குறைந்த விலைக்கு எல்சிடி டிஸ்ப்ளே மூலம் அதை மாற்றியிருக்கின்றதா என்பது உறுதி செய்யப்படவில்லை.

2023 கேடிஎம் 390 அட்வென்ச்சர் X அறிமுக விலை ரூ.2.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் விலை ரூ.3.38 லட்சம் ஆகும்.

இந்திய சந்தையில், கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு போட்டியாக யெஸ்டி அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ G 310 GS மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஆகியவை உள்ளன.

Related Motor News

₹ 3.68 லட்சத்தில் 2025 கேடிஎம் அட்வென்ச்சர் விற்பனைக்கு அறிமுகமானது..!

2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பற்றி விற்பனைக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை.!

திவாலாகும் நிலையில் கேடிஎம் நிறுவனம்..!

கேடிஎம் 250, 390 அட்வென்ச்சர் பைக்கிற்கு டாப் பாக்ஸ் இலவச சலுகை..!

2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் எதிர்பார்ப்புகள் என்ன.?

2024 கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஸ்பை படங்கள் வெளியானது

Tags: KTM 390 Adventure
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V விற்பனைக்கு அறிமுகமானது

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V விற்பனைக்கு அறிமுகமானது

20 ஆண்டுகளை கொண்டாட சிறப்பு டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் அறிமுகமானது

டிவிஎஸ் மோட்டாரின் என்டார்க் 150 புதிய சாகப்தம் உருவாக்கிறதா.?

ரூ.1.69 லட்சத்தில் 2025 யமஹா R15 V4 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் என்டார்க் 150 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹீரோவின் ஜூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன்பதிவு, டெலிவரி விபரம்

செப்டம்பர் 4ல் என்டார்க் 150 விற்பனைக்கு வெளியிடும் டிவிஎஸ் மோட்டார்

ஏதெர் எனர்ஜி ஃபாஸ்ட் சார்ஜர், ஏதெர்ஸ்டேக் 7.0 மேலும் பல..,

ஏதெர் Redux ஸ்போர்ட்டிவ் மின்சார மோட்டோ-ஸ்கூட்டர் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan