Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

2024 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் அறிமுக விபரம் வெளியானது

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 23,February 2024
Share
SHARE

bajaj dominar 400 launch soon

மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கூடுதலாக சில மாற்றங்களை பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் டாமினார் 400 மற்றும் டாமினார் 250 பைக்குகள் விற்பனைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

டாமினார் 400 பைக்கில் தற்பொழுதுள்ள 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில், இதற்கு மாற்றாக புதிய டியூக் 390 மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 399சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஒரு சில மாடல்களில் மட்டுமே 373சிசி என்ஜின் பயன்படுத்தபட்டு வரும் நிலையில் படிப்படியாக இந்த என்ஜின் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே, புதிய டாமினார் 400 பைக்கில் அதிகபட்சமாக 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க்கை உற்பத்தி செய்கின்ற 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கும்.

ஏற்கனவே, இந்த மாடலில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ரைட் கனெக்ட் ஆப் வசதியை இரண்டு டாமினர்களும் பெற உள்ளது. இந்த செயலி மூலம் இணைக்கும் பொழுது ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனினை இணைத்தால் மொபைல் சிக்னல், எஸ்எம்எஸ் அலர்ட், அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி பெறக்கூடும். கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ், ரைடிங்கை பொறுத்து தற்பொழுது மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் உள்ளிட்ட விவரங்களை பெற்றிக்கும்.

டாமினார் 250 மாடலில் 248.8 சிசி, திரவத்தினால் குளிரூட்டும் முறை பெற்ற ஒரு சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 27hp பவரை 8,500rpm-லும்  23.5Nm டார்க்கினை 6,500rpm-ல் வெளிப்படுத்துகின்றது.

தற்பொழுது விற்பனையில் உள்ள பஜாஜ் டோமினார் 400 மாடல் ரூ.2.30 லட்சத்தில் கிடைப்பதனால் விற்பனைக்கு வரவுள்ள மாடல் ரூ.7000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டு ரூ.2.40 லட்சத்துக்குள் வெளியிடப்படலாம்.

best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:bajaj autoBajaj Dominar 250Bajaj Dominar 400
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ விடா வி2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
Vida Electric
ஹீரோ விடா V2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 hero xpulse 210 first look
Hero Motocorp
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 Honda dio 110cc
Honda Bikes
2025 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved