
வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்ற புதுப்பிக்கப்பட்ட 2024 பல்சர் N250, F250 பைக்குகள் பல்வேறு வசதிகளுடன் புதிய நிறங்களுடன் வரவுள்ளது.
சமீபத்தில் பல்சர் வரிசை பைக்குகளில் இடம் பெற்றிருக்கின்ற என்.எஸ் மற்றும் என் சீரியஸ் பைக்குகளில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி எல்லாம் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட எல்ஈடி ஹெட்லைட் போன்ற பல்வேறு மாற்றங்கள் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
2024 Pulsar N250, F250
அதேபோல இந்த மாடலும் அடிப்படையான டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் எல்இடி ஹெட்லைட் ஆகியவை பெற்றதாகவும் கூடுதலாக அப்சைடு டவுன் ஃபோர்க், டிராக்ஷன் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளுடன் நமக்கு சில மாற்றங்களை தந்திருக்கலாம்.
249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
இரு பக்க டயரிலும் 17 அங்குல வீல் பெற்று 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆனது பல்சர் 250 மாடலில் இணைக்கப்பட்டுள்ளது.
பல்சர் என்250 மற்றும் எஃப்250 விலை ரூ.1.50 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) கிடைக்கின்ற நிலையில் வரவுள்ள புதிய 2024 பல்சர் மாடல் விலை ரூ.8,000 முதல் 12,000 வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம்.

