பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பைக்குகளில் பல்சர் N160 மாடலில் தற்பொழுது ரைட் கனெக்ட் எனப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதால் டீலர்களுக்கு வந்தடைந்துள்ளது.
ஹீரோ மற்றும் டிவிஎஸ், யமஹா நிறுவனங்கள் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெகட்டிவிட்டி வசதிகளை வழங்கும் நிலையில் இந்த வரிசையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இணைந்துள்ளது. புதிய பல்சர் என்160 பைக்கில் இடம்பெற உள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி பெறவில்லை.
முழுமையான டிஜிட்டல் எல்சிடி கிளஸ்ட்டர் மூலம் ப்ளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்துவதனால் சராசரி எரிபொருள் சிக்கனம், எரிபொருள் இருப்பின் மூலம் பயணிக்கின்ற தொலைவு, கியர் பொசிஷன் இன்டிகேட்டர், நேரம், ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் அளவு ஆகியவற்றையும் இந்த கிளஸ்டர் மூலம் பெறுவதுடன் கூடுதலாக சிக்னல், பேட்டரி இருப்பு மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் தவறவிட்ட அழைப்புகளுக்கான அறிவிப்புகளை கிளஸ்ட்டர் மூலம் பெறலாம்.
இடது கைப்பிடியில் புதிய சுவிட்ச் கியரில் பட்டனைப் பயன்படுத்தி ரைடர் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் எல்இடி டெயில் லேம்ப் ஆகியவற்றுடன் தொடர்ந்து வருகிறது.
பல்சர் N160 பைக்கில் 164.82cc, ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15.7 bhp மற்றும் 14.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜினில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை பெற்று இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது. புதிய பஜாஜ் பல்சர் N160 விலை ரூ.1.34 லட்சத்தில் விற்பனைக்கு வெளியாகலாம். இந்த மாடலை தொடர்ந்து பல்சர் N150 உட்பட மற்ற பல்சர் பைக்குகளில் இந்த கிளஸ்ட்டரை பெற உள்ளது.
image source – Sangram AutoWorld YouTube