Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike ComparisonBike News

2024 பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ஒப்பீடு

By நிவின் கார்த்தி - Editor
Last updated: 17,March 2024
Share
2 Min Read
SHARE

2024 பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

200சிசி சந்தையில் கிடைக்கின்ற பல்சர் என்எஸ்200 vs அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி என இரண்டு நேக்டூ ஸ்போர்ட்டிவ் மாடலும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களின் எஞ்சின், நுட்பவிபரங்கள், வசதிகள் மற்றும் ஆன்ரோடு விலையை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.

Contents
  • பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V: எஞ்சின்
  • பல்சர் NS200 vs அப்பாச்சி RTR 200 4V: வசதிகள்
  • 2024 Bajaj Pulsar NS200 vs TVS Apache RTR 200 4V On-road Price

இளைய தலைமுறையினர் பெரிதும் விரும்பும் வகையிலான தோற்றத்துடன் நவீனத்துவமான வசதிகள் கொண்டதாக வந்துள்ள புதிய 2024 பல்சர் NS200 மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல் கிளஸ்ட்டர்  எல்இடி ஹெட்லைட் என இரு முக்கிய அம்சங்களை சேர்த்து விற்பனையில் உள்ள அப்பாச்சி RTR 200 4V மோட்டார்சைக்கிளுக்கு எதிராக அமைந்துள்ளது.

பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V: எஞ்சின்

இரு மாடல்களின் எஞ்சினை முதலில் நாம் ஒப்பீடு செய்தால் பல்சர் 200 என்எஸ் மாடல் அப்பாச்சி 200 மாடலை விட சுமார் 4.6bhp வரை கூடுதல் பவர் வெளிப்படுத்துகின்றதை அறியலாம். இதன் மூலம் அப்பாச்சியை விட பல்சர் சிறப்பான செயல்திறனை வழங்குவதுடன் 6 வேக கியர்பாக்ஸ் லிக்யூடு கூல்டு எஞ்சின் என அனைத்திலும் முந்துகின்றது.

ஸ்போர்ட், அர்பன் அல்லது ரெயின் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடல் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

நுட்பவிபரம் பல்சர் NS200 அப்பாச்சி RTR 200 4V
எஞ்சின் 199.5 cc 197.75 cc
பவர் bhp 24.1 bhp 20.5 bhp
டார்க் 18.7 Nm 17.2 Nm
கியர்பாக்ஸ் 6 ஸ்பீடு 5 ஸ்பீடு

எஞ்சின் ஒப்பீடு முடிவில் பவர், டார்க், செயல்திறன் என அனைத்திலும் அப்பாச்சி மோட்டாசைக்கிளை விட பல்சர் என்எஸ் 200 சிறப்பானதாக உள்ளது. ஆனால் ரைடிங் மோடுகளை மட்டும் பெறவில்லை.

பல்சர் NS200 vs அப்பாச்சி RTR 200 4V: வசதிகள்

ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் உடன் உள்ள டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றதாக அமைந்துள்ளது. பல்சரில் முன்பக்கத்தில் யூஎஸ்டி ஃபோர்க் பெற்றுள்ளது.

17 அங்குல அலாய் வீல் பெற்றுள்ள இரு மோட்டார்சைக்கிளிலும் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ஸ்மார்ட்போன் வாயிலாக ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றிருந்தாலும் அப்பாச்சி மாடலில் ரேசிங் டெலிமேட்டிக்ஸ், லீன் ஏங்கிள் உள்ளிட்ட விபரங்களை பெறலாம்.

2024 பஜாஜ் பல்சர் NS200 vs டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V

2024 Bajaj Pulsar NS200 vs TVS Apache RTR 200 4V On-road Price

தயாரிப்பாளர் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை
Bajaj Pulsar NS200 ₹ 1,54,522 ₹ 1,89,672
TVS Apache RTR 200 4V ₹ 1,47,137 ₹ 1,80,753

(All price Tamil Nadu)

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலை விட கூடுதல் விலையில் அமைந்திருந்தாலும், அதிகபட்ச பவர், டார்க், செயல்திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் ஆகியவற்றுடன் இல்குவாக ஷிஃப்ட் செய்யவும், பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்த ஏதுவாக 6 வேக கியர்பாக்ஸ் ஆகியவற்றுடன் 2024 பல்சர் 200 என்எஸ் போட்டியாளரை முந்துகின்றது.

New Hero Glamour X 125 on road price
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் பாப் 117 விற்பனைக்கு வெளியானது
புதிய ஹீரோ கிளாமர் X 125 எதிர்பார்ப்புகள் என்ன.!
விலை குறைப்பு., ஓலா S1 Pro +, ரோட்ஸ்டெர் X+ மாடல்களில் 4680 செல்கள் அறிமுகம்
TAGGED:200cc BikesBajaj Pulsar NS200TVS Apache RTR 200 4V
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
hero destini prime price
Hero Motocorp
2025 ஹீரோ டெஸ்டினி பிரைம் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
honda sp160 price
Honda Bikes
ஹோண்டா எஸ்பி 160 பைக்கின் ஆன்ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
r15 v4 white
Yamaha
2024 யமஹா R15 V4 விலை, மைலேஜ் சிறப்புகள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved