Skip to content

ஹீரோவின் 2024 ஜூம் 110 மாடலின் வேரியண்டின் விபரங்கள் மற்றும் விலை

Hero-Xoom-Colours

110cc சந்தையில் கிடைக்கின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன ஜூம் ஸ்கூட்டரின் 2024 மாடலில் LX,VX,ZX மற்றும் காம்பேட் எடிசன் என மொத்தமாக 4 வகைகளின் மாறுபட்ட வசதிகள், நுட்பவிபரங்கள், மைலேஜ் மற்றும் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.

நான்கு வகையான வேரியண்ட்டை பெற்றிருக்கின்ற ஜூம் 110 ஸ்கூட்டரில் பொதுவாக வழங்கப்பட்டுள்ள சிவிடி கியர்பாக்ஸ் பெற்று 110.9சிசி பெட்ரோல் என்ஜின், 4-ஸ்ட்ரோக், ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.05 bhp பவரை 7250RPMலும் மற்றும் 8.70 Nm டார்க்கினை 5500RPMல் வெளிப்படுத்துகின்றது.

110சிசி சந்தையில் கிடைக்கின்ற போட்டியாளர்களை விட மிக வேகமான ஸ்கூட்டர் என அறியப்படுக்கின்ற ஜூம் மாடல் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.35 வினாடிகளை எடுத்துக் கொள்ளுகின்றது. மேலும் ஜூம் 110 ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 45-48 கிமீ வரை வழங்குகின்றது.

மற்ற மெக்கானிக்கல் சார்ந்த அடிப்படையாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் யூனிட் ஸ்விங் உடன் கூடிய ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக அனைத்து வேரியண்டுகளிலும் எல்இடி புராஜெக்டர் ஜெட்லைட் மற்றும் டெயில்லைட் கொண்டதாக உள்ளது.

hero xoom lx vs zx cluster

  • 2024 Hero Xoom 110 LX

2024 ஆம் ஆண்டிற்கான ஜூம் எல்எக்ஸ் வேரியண்டில் ஒற்றை வெள்ளை நிறத்தை மட்டும் பெற்று டிஜி அனலாக் முறையிலான கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு, சீட் மெட்டல் வீல் உள்ள இரு பக்க டயர்களிலும் பொதுவாக 90/90-12 54J கொண்டு 130 மிமீ டிரம் பிரேக்குடன் கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

hero xoom lx white 1

  • 2024 Hero Xoom 110 VX

அடுத்து VX வேரியண்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்றிருந்தாலும் கனெக்ட்டிவ் வசதிகள் இல்லாமல் பொதுவாக 130 மிமீ டிரம் பிரேக்குடன் முன்புறம் 90/90-12 54J டயர் மற்றும் பின்புறத்தில் 100/80-12 56L டயர் பெற்று i3S நுட்பத்தின் மூலம் எரிபொருளை சேமிக்கும் வசதியுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் பூட் லைட் ஸ்டாண்டராக கொண்டுள்ளது.

விஎக்ஸ் வேரியண்டில் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.

hero xoom vx colours

  • 2024 Hero Xoom 110 ZX

ஜூம் 110 ZX வேரியண்டில் டிஜிட்டல் கிளஸ்ட்டரில் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனை இணைக்கும் பொழுது பல்வேறு ஸ்மார்ட்போன் சார்ந்த அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்புகள் உட்பட அனைத்து வசதிகளுடன் முன்புறத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று பின்புறத்தில் 130 மிமீ டிரம் உடன் கிடைக்கின்றது.

முன்புறம் 90/90-12 54J டயர் மற்றும் பின்புறத்தில் 100/80-12 56L டயர் பெற்று i3S நுட்பம், டைமண்ட் கட் அலாய் வீல், கார்னரிங் லைட் என பலவற்றை கொண்டுள்ளது. ஜூம் ZX வேரியண்டில் ஆரஞ்ச், சிவப்பு, கருப்பு மற்றும் நீலம் என நான்கு நிறங்களுடன் கிடைக்கின்றது.

xoom zx

  • 2024 Hero Xoom 110 Combat Edition

ஒற்றை மேட் ஷேடோ கிரே நிறத்துடன் ZX வேரியண்டின் அனைத்து வசதிகளுடன் ஜெட் ஃபைட்டர் விமானங்களின் இறைக்கைகளில் உள்ள பாடி கிராபிக்ஸ் சார்ந்த ஸ்டிக்கரிங் பெற்றுள்ளது.இதன் மூலம் தனித்துவமான அடையாளத்தை ஜூம் காம்பேட் சிறப்பு எடிசன் பெறுகின்றது.

hero xoom 110 combat edition rear

2024 Hero Xoom 110 Price in Tamil Nadu

110சிசி சந்தையில் கிடைக்கின்ற ஹோண்டா டியோ 110 உட்பட மற்ற போட்டியாளர்களான ஆக்டிவா, ஜூபிடர் போன்ற மாடல்களுக்கு கடும் சவாலினை வழங்குகின்ற ஜூம் 110 ஆன்ரோடு விலை ரூ.94,796 துவங்குகின்ற நிலையில் முழுமையான பட்டியல் அட்டவனையில் உள்ளது.

எக்ஸ்ஷோரூம் ஆன்ரோடு
Xoom 110 LX ₹ 77,070 ₹ 94,796
Xoom 110 VX ₹ 80,428 ₹ 1,00,021
Xoom 110 ZX ₹ 85,528 ₹ 1,06,103
Xoom 110 Combat ₹ 86,528 ₹ 1,07,211

(Onroad price in Tamil Nadu)

hero xoom scooter

ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டரில் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பு, பல்வேறு மாறுபட்ட நிறங்கள், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவ் வசதிகள், எல்இடி ஹெட்லைட் அனைத்து வேரியண்டிலும், ஸ்டைலிஷான காம்பேட் எடிசன் கொண்டிருக்கும் நிலையில், வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி இல்லாமல் இருக்கைக்கு அடிப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.