Categories: Bike News

இன்று 2024 கேடிஎம் 125 டியூக், 250 டியூக், 390 டியூக் அறிமுகமாகிறது

ktm 380 duke headlight

புதுப்பிக்கப்பட்ட என்ஜின் மற்றும் புத்தம் புதிய வடிவமைப்பினை பெற்ற கேடிஎம் நிறுவனத்தின் 125 டியூக், 250 டியூக், மற்றும் 390 டியூக் ஆகிய மாடல்களை விற்பனைக்கு இன்றைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

நேற்றிரவு தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் மூன்று பைக்குகளை அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.

2023 KTM Duke

முன்பாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த படங்கள் மூலம் 390 டியூக் மிக நேர்த்தியான மாற்றங்கள் மட்டும் கொண்டுள்ளது. முழுமையானTFT டிஸ்பிளேவுடன் கூடிய ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி பெற்ற கிளஸ்ட்டர் பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆகியவற்றை பெற்றதாக வரவுள்ளது.

புதிய 390 டியூக் பைக்கில் 399cc  புதிய லிக்யூடு கூல்டு என்ஜின் பெறலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தொடர்ந்து 373cc என்ஜின் பயன்படுத்தப்படுமா என எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை. புதிய என்ஜின் கூடுதல் பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தலாம்.

மற்ற இரு டியூக் மாடல்களில் எந்த மாதிரியான என்ஜின் மாற்றங்கள் இருக்கும் என உறுதி செய்யப்படவில்லை. டிசைனில் 390 டியூக் போலவே அமைந்திருக்கலாம்.