ஃபேரிங் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் கேடிஎம் ஆர்சி வரிசையில் உள்ள RC390, RC200, மற்றும் RC125 மாடல்களில் 2024 ஆம் ஆண்டிற்கு புதிய நிறங்களை பெற்று எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக ஆர்சி பைக்குகளின் புதிய நிறங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து தற்பொழுது இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் RC 390 பைக் மாடலில் 373சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் 42.9bhp மற்றும் 37Nm டார்க்கினை வழங்கி 6 வேக கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டு புதிதாக ஆரஞ்ச் நிறத்துடன் நீல நிறமும் மற்றும் கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் வண்ணத்தை கொண்டுள்ளது.
2024 கேடிஎம் RC 200 பைக் மாடலில் முழுமையான கருப்பு நிறம் மற்றும் நீல நிறத்துடன் பல்வேறு இடங்களில் ஆரஞ்ச் பெற்றுள்ளது. இந்த மாடலில் 25 hp பவரை வெளிப்படுத்தும் 199cc எஞ்சின் பொருத்தப்பட்டு 19.2 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
2024 கேடிஎம் RC125 மாடலில் 14.34bhp மற்றும் 12Nm பவர் வெளிப்படுத்தும் 124.7cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் லிக்யூடு கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மாடலில் கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் மற்றும் நீல நிறத்துடன் ஆரஞ்ச் என இரு நிறங்களை கொண்டுள்ளது.
2024 KTM RC 390 – ₹ 3,18,173
2024 KTM RC 200 – ₹ 2,17,696
2024 KTM RC 125 – ₹ 1,89,542
கூடுதலாக கேடிஎம் 250 அட்வென்ச்சர் மற்றும் 390 அட்வென்ச்சர் பைக்குகளும் புதிய நிறத்தை பெற்று விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…