ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள சுசூகி அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் 2024 ஆம் ஆண்டு மாடலுக்கான புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 92,000 விலையில் துவங்குகின்ற இந்த மாடலில் மிகவும் ஸ்போர்ட்ட்டிவான எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில்விளக்கு உள்ளிட்டவைகளுடன் டர்ன் இன்டிகேட்டர் ஆனது மிக நேர்த்தியாகவும் அமைந்திருக்கின்றது.
8.5bhp பவர் மற்றும் 10Nm டார்க்கை வழங்கும் 124சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 106 கிலோகிராம் எடை கொண்டுள்ள அவெனிஸ் ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் ஆனது வழங்கப்பட்டிருக்கின்றது.
முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்குடன் கம்பைண்ட் பிரேக்கிங் சிஸ்டமானது கொடுக்கப்பட்டிருக்கின்றது. முன்பக்கம் 12 அங்குல டயர் மற்றும் பின்பகுதியில் 10 அங்குல டயர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் சிவப்பு வெள்ளை மற்றும் கருப்பு என என நான்கு நிறங்களில் மிக நேர்த்தியாக Avenies பேட்ஜ் லோகோ ஆனது பக்கவாட்டில் உள்ளது. ப்ளூடூத் இணைப்பைப் பெறும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ரைடு கனெக்ட் ஆப் மூலம் ரைடரின் ஸ்மார்ட்போனுடன் இணைத்தால், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மற்றும் அழைப்பு எச்சரிக்கை ஆகிய வசதிகளை ஆதரிக்கின்றது.
தமிழ்நாட்டில் 2024 சுசூகி அவெனிஸ் விலை ₹96,236 முதல் ₹ 97,035 வரை (எக்ஸ் ஷோரூம்) அமைந்துள்ளது. 125சிசி போட்டியாளர்களான ஹோண்டா டியோ, டிவிஎஸ் என்டார்க், யமஹா ரே ZR மற்றும் வரவிருக்கும் ஹீரோ ஜூம் 125 ஆகியவற்றை எதிர்கொள்கின்றது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…
அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…
வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…
ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…
இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…
சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…