Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஸ்மார்ட் கீ வசதியுடன் 2024 யமஹா ஏரோக்ஸ் 155 விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
17 April 2024, 1:10 pm
in Bike News
0
ShareTweetSend

2024 யமஹா ஏரோக்ஸ் 155

யமஹா நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஏரோக்ஸ் 155cc (Aerox) மேக்ஸி ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டரில் கூடுதலாக ஸ்மார்ட் கீ வசதி இணைக்கப்பட்ட மாடலை Version S என்ற பெயரில் ரூ.1.51 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கீ பெறப்பட்ட ஏரோக்ஸ் வெர்ஷன் எஸ் வேரியண்டில் சில்வர் மற்றும் ரேசிங் ப்ளூ என இரு நிறங்களை கொண்டதாக கிடைக்கின்றது.

2024 Yamaha Aerox 155cc Version S

என்ஜின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ள OBD2 மற்றும் E20 ஆதரவு பெற்ற VVA வசதியை கொண்ட 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 15bhp பவர் வெளிப்படுத்த 8000rpm-லும் மற்றும் 13.9Nm டார்க் 6,500rpm-ல் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் CVT கியர்பாக்ஸுடன் வருகின்றது.

யமஹாவின் ஸ்மார்ட் கீ நுட்பத்தின் மூலம் சிறந்த பாதுகாப்பு, இலகுவாக ஸ்கூட்டரை அனுகவும் மற்றும் சிறப்பான ரைடிங் மேம்பாடாக அமைய உள்ளது.

  • கீலெஸ் அனுகல் மூலம் ஏரோக்ஸ் ஸ்கூட்டரை கீ இல்லாமல் ரீமோட் கீ மூலம் ஸ்டார்ட் செய்யலாம்.
  • Answer Back என்ற வசதியின் மூலம் நெரிசல் மிகுந்த பார்க்கிங் உள்ள இடத்தில் வாகனத்தை இலகுவாக அறிந்து கொள்ள எல்இடி பிளாஷர் மற்றும் பஸர் ஒலி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
  • immobilizer function எனப்படுகின்ற வசதியின் மூலம் திருட்டை தடுக்கும் வசதி பெற்றுள்ளது.

2024 யமஹா ஏரோக்ஸ் 155cc

டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியுடன் ஏரோக்ஸ் 155 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று பிரேக்கிங் முறையில் 230 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 110/80-14 முன்புற டயர் மற்றும் 140/70-14 பின்புற டயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஏப்ரிலியா SXR160 மாடலை எதிர்கொள்வதுடன் வரவுள்ள ஹீரோ ஜூம் 160 மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

yamaha aerox 155 version s

யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு. ஈஷின் சிஹானா கூறுகையில், “ஏரோக்ஸ் 155 Version S அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து அமோக வரவேற்பினை பெற்று வெற்றி பெற்றுள்ளது.  சிறப்பான ஈர்க்கக்கூடிய செயல்திறன் மற்றும் அசாதாரண வடிவமைப்பால் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி அடையும் நகரங்களுக்கு ஏற்ப, திறமையான போக்குவரத்து தீர்வுகளின் தேவை கணிசமாக வளர்ந்துள்ளது, யமஹாவை புதுமைகளை செயல்படுத்த தூண்டுகிறது. இது ரைடர்களின் வளர்ந்து வரும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் தேவைகளையும் மிஞ்சும் வகையில் இருக்கும் என குறிப்பிட்டார்.

Related Motor News

ரூ.1.71 லட்சத்தில் புதிய யமஹா MT-15 v2.0 வெளியானது

10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா

யமஹாவின் 2025 ஏரோக்ஸ் 155cc ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் 10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த யமஹா R15 V4 சூப்பர் ஸ்போர்ட் பைக்..!

இந்தியா வரவிருக்கும் யமஹா R9 சூப்பர் ஸ்போர்ட் பைக் அறிமுகமானது

புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் வந்த 2025 யமஹா R3 இந்திய அறிமுகம் எப்பொழுது..?

Tags: YamahaYamaha Aerox 155
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

hero xtreme 125r orange

புதிய நிறத்தில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் விற்பனை துவங்கியது

ஹீரோ கிளாமர் X 125 Cruise control

ஹீரோவின் கிளாமர் எக்ஸ் வாங்குபவர்கள் அறிய வேண்டியது என்ன?

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 421 அட்வென்ச்சர் EICMA 2025ல் அறிமுகம்

சுசூகி 2026 V-STROM SX புதிய நிறங்களில் அறிமுகமானது

₹ 2.99 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 RR லிமிடெட் எடிசன் சிறப்புகள்

புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்.!

விடா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள்

ரூ.2.74 லட்சத்தில் அல்ட்ராவைலட் X47 கிராஸ்ஓவர் விற்பனைக்கு அறிமுகமானது

புதிய ஹீரோ டெஸ்டினி 110 விற்பனைக்கு வெளியானது

டிவிஎஸ் XL 100 மொபெட்டில் அலாய் வீலுடன் டீயூப்லெஸ் டயர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan