Automobile Tamilan

2025 பஜாஜ் டோமினார் 400, டோமினார் 250 விற்பனைக்கு வெளியானது

2025 bajaj dominar 400 and dominar 250 launched

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான டூரிங் ஸ்டைலை பெற்ற டோமினார் 400 மற்றும் டோமினார் 250 மாடல்கள் முறையே ₹2,38,682 மற்றும் ₹1,91,654 எக்ஸ்-ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2025 டோமினார் வரிசையில் Road, Rain, Sport, மற்றும் Off-Road என 4 விதமான முறைகளை பெற்ற ஏபிஎஸ் மோடு, புதுப்பிக்கப்பட்ட ரைடிங் அமைப்பினை மேம்படுத்தி மாற்றியமைக்கப்பட்ட ஹேண்டில் பார் உடன் புதிய எல்சிடி கிளஸ்ட்டர் மேம்பட்ட திரையுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது.

கூடுதலாக டோமினார் 400 மாடலில் ரை பை வயர் நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளதால், முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது.

டோமினார் 250 மாடலில் 248.77cc, லிக்யூடு கூல்டு எஞ்சின் 8,500rpm-ல் 26.6bhp பவர், 6,500rpm-ல் 23.5Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டோமினார் 400 மாடலில் 373cc, லிக்யூடு கூல்டு எஞ்சின் 8,000rpm-ல் 40bhp பவர், 6,500rpm-ல் 35Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version