Bike News

ரூ.91,771 விலையில் 2025 ஹோண்டா SP125 விற்பனைக்கு வெளியானது.!

2025 ஹோண்டா SP125 பைக்

ஹோண்டா நிறுவனம் 125சிசி சந்தையில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய SP125 மாடலை ரூ.91,771 முதல் ரூ.1,00,284 வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலை விட புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ், எல்இடி ஹெட்லைட், TFT கிளஸ்ட்டர் உள்ளிட்டவை முக்கிய மாற்றங்களாக அமைந்துள்ளது.

2025 Honda SP125

  • 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரில் RoadSync Duo கனெக்ட்டிவிட்டி வசதி
  • டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி
  • புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் பெற்றுள்ளது.

இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், பேர்ல் சைரன் ப்ளூ, இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் என 5 விதமான நிறங்களை பெற்றுள்ள ஹோண்டா எஸ்பி125யில் தொடர்ந்து OBD2B ஆதரவினை பெற்ற 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டு மிக நேர்த்தியான நிறங்களுடன் சிறிய அளவிலான ஸ்டைலிஷ் மாற்றங்களை மட்டும் கண்டுள்ள பைக்கில் புதிய 4.2-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் மூலம் ஹோண்டா ரோடுசிங் ஆப் வாயிலாக இணைக்கும் பொழுது நேவிகேஷன், அழைப்பு, எஸ்எம்ஸ் சார்ந்த அறிவிப்புகள கிடைக்கின்றது. கூடுதலாக யூஎஸ்பி Type-C சார்ஜிங் போர்டு வழங்கப்பட்டுள்ளது.

  • SP125 Drum Rs. 91,771
  • SP125 Disc Rs. 1,00,284

(Ex-showroom Delhi)

முந்தைய sp 125 மாடலை விட ரூ.4,200 முதல் ரூ.8,700 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு போட்டியாக ஏபிஎஸ் பெற்ற ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, டிவிஎஸ் ரைடர் 125 பல்சர் NS125, பல்சர் N125, மற்றும் ஹீரோ கிளாமர் 125, சூப்பர் ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், ஃப்ரீடம் 125 சிஎன்ஜி ஆகிய மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Share
Published by
MR.Durai