Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

₹ 3.68 லட்சத்தில் 2025 கேடிஎம் அட்வென்ச்சர் விற்பனைக்கு அறிமுகமானது..!

ரூ.3.68 லட்சத்தில் வந்துள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சரில் ரைடிங் மோடு, கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளது.

By MR.Durai
Last updated: 5,February 2025
Share
SHARE
Highlights
  • முன்புறத்தில் 21 அங்குல வீல், 18 அங்குல பின்புறம் வீல் கொண்டுள்ளது.
  • வயர் ஸ்போக்டூ வீல் பெற்றாலும் ட்யூப்லெஸ் டயர் உள்ளது.
  • 45 hp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் 399சிசி எஞ்சின் உள்ளது.

2025 கேடிஎம் அட்வென்ச்சர்

கேடிஎம் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய 390 அட்வென்ச்சர் மாடல் பல்வேறு மாற்றங்களுடன் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய எஞ்சின், ரேலி பைக்குகளுக்கு இணையான ஸ்டைல் கொண்டதாக விற்பனைக்கு ரூ.3.68 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

2025 KTM 390 Adventure

புதிய 398.7cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 45 hp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச்  உடன் பை டைரக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் இடம்பெற்றிருக்கின்றது. இந்த எஞ்சின் முன்பாக 390 டியூக் பைக்கிலும் இடம்பெற்றுள்ளது.

390 அட்வென்ச்சர் மாடல் முழுமையான ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக முன்புறத்தில் 21 அங்குல வீல் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 18 அங்குல வீல் வழங்கப்பட்டு வயர் ஸ்போக்டூ வீல் பெற்றாலும் ட்யூப்லெஸ் டயர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 90/90 டயரும் பின்புறத்தில் 140/80 டயரும் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ் உடன் ஆஃப் ரோடு ரைடிங் மோடு, ரெயின், ஸ்டீரிட் மற்றும் ஆஃப் ரோடு என மூன்று ரைடிங், க்ரூஸ் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

227 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டு 830 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ள 390 அட்வென்ச்சர் பைக்கில் ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் 230 மிமீ பயணிக்கின்ற டபிள்யூ அபெக்ஸ் 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்திலும் 230 மிமீ பயணிக்கின்ற அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

5 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரை பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற கேடிஎம் கனெக்ட் ஆப் மூலம் இணைக்கலாம். கூடுதலாக யூஎஸ்பி-சி சார்ஜிங் போர்ட் உள்ளது.

வெள்ளை, ஆரஞ்ச் என இரண்டு நிறங்களை பெற்றுள்ள 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு ஏற்கனவே முன்பதிவு நடைபெற்று வருகின்ற நிலையில் விரைவில் விநியோகம் துவங்கப்பட உள்ளது. குறிப்பாக முந்தைய மாடலை விட ரூ.26,000 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Indian Scout Range
ரூ.12.99 லட்சம் முதல் 2025 இந்தியன் ஸ்கவுட் மோட்டார்சைக்கிள் வெளியானது
சுசுகி E-அக்சஸ் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
TAGGED:KTM 390 Adventure
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 suzuki burgman street
Suzuki
2025 சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
suzuki e access
Suzuki
சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 suzuki access 125
Suzuki
2025 சுசூகி ஆக்சஸ் 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்
new Royal Enfield classic 650 bike front
Royal Enfield
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms