Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் R மற்றும் 390 அட்வென்ச்சர் X பைக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்.!

2025 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர், 390 அட்வென்ச்சர் எக்ஸ் என இரண்டு மாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

By MR.Durai
Last updated: 31,January 2025
Share
SHARE
Highlights
  • 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் 21 அங்குல முன்புற வீல் பின்புறத்தில் 18 அங்குல வீல் உள்ளது.
  • 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கில் 19 அங்குல முன்புற வீல் பின்புறத்தில் 17 அங்குல வீல் உள்ளது.
  • அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், டிஎஃப்டி கிளஸ்ட்டரை 390 அட்வென்ச்சர் R பெறுகின்றது.

2025 ktm 390 adventure r and 390 adventure x

கேடிஎம் வெளியிட்டுள்ள பிரபலமான 390 அட்வென்ச்சர் R பைக்கில் புதிய 399சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு பல்வேறு மாற்றங்களுடன் நவீனத்துவமான வசதிகளுடன் விளங்கும் நிலையில் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியவற்றை பார்க்கலாம்.

Contents
  • KTM 390 Adventure R
  • KTM 390 Adventure X

இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆர் மற்றும் 390 அட்வென்ச்சர் எக்ஸ் என இரண்டு பைக்கிலும் முன்பாக வெளியான 390 டியூக் மாடலில் இடம்பெற்ற புதிய 398.7cc, ஒற்றை சிலிண்டர் லிக்யூடூ கூல்டு எஞ்சின் 45 hp மற்றும் 39 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றிருக்கின்றது.

KTM 390 Adventure R

மிக சிறப்பான வகையில் ஆஃப் ரோடு பயணத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் முன்புறத்தில் 21 அங்குல வீல் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 18 அங்குல வீல் வழங்கப்பட்டு வயர் ஸ்போக்டூ வீல் இட்பெற்றுள்ளது. முன்புறத்தில் 90/90 டயரும் பின்புறத்தில் 140/80 டயரும் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 2 பிஸ்டன் பெற்ற 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ் உடன் ஆஃப் ரோடு ரைடிங் மோடு, டிராக்‌ஷன்  கொண்டதாகவும் அமைந்துள்ளது.

870 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ள 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சஸ்பென்ஷன் அமைப்பில் முன்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் 230 மிமீ பயணிக்கின்ற WP APEX 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்திலும் 230 மிமீ பயணிக்கின்ற அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

14 லிட்டர் பெட்ரோல் டேங்க் பெற்றுள்ள 390 அட்வென்ச்சர் ஆர் பைக்கில் எல்இடி ஹெட்லைட், சற்று உயரமான வின்ட் ஷீல்டு ஆகியவற்றுடன்  TFT கிளஸ்ட்டரை பெற்று கேடிஎம் கனெக்ட் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

2025 ktm 390 adventure r 1

 

KTM 390 Adventure X

அட்வென்ச்சர் ஆர் மாடலை விட சற்று குறைவான ஆஃப் ரோடு பயண வசதிகளை பெற்றுள்ள 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கில் 825 மிமீ இருக்கை உயரம் பெற்று தொடர்ந்து ஸ்டீல் டெர்லிஸ் ஃபிரேம் கொண்டு அட்ஜெஸ்ட் செய்ய இயலாத 200 மிமீ பயணிக்கின்ற WP APEX 43மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டு பின்புறத்திலும் 200 மிமீ பயணிக்கின்ற மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

முன்புறத்தில் 19 அங்குல வீல் கொடுக்கப்பட்டு பின்புறத்தில் 1 அங்குல வீல் வழங்கப்பட்டு அலாய் வீல் இட்பெற்றுள்ளது. முன்புறத்தில் 100/90 டயரும் பின்புறத்தில் 130/80 டயரும் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 2 பிஸ்டன் பெற்ற 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் ஆஃப் ரோடு ஏபிஎஸ் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டு 165 கிலோ எடை கொண்டுள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ் பைக்கில் ல்இடி ஹெட்லைட், சற்று உயரமான வின்ட் ஷீல்டு ஆகியவற்றுடன் LCD கிளஸ்ட்டரை பெற்று கேடிஎம் கனெக்ட் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

2025 ktm 390 adventure

2025 KTM Adventure R and X technical specification
2025 KTM Adventure R and X technical specification
best 125cc bikes
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
ஏதெரின் பட்ஜெட் விலை EL எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது
TAGGED:KTM 390 Adventure RKTM 390 Adventure X
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
xtreme 200s 4v
Hero Motocorp
2023 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்
ஹீரோ டெஸ்டினி 125 ஆன் ரோடு
Hero Motocorp
ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
honda cb 125 hornet
Honda Bikes
ஹோண்டா CB 125 ஹார்னெட் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
2024 bajaj pulsar ns200 headlight
Bajaj
2024 பஜாஜ் பல்சர் NS200 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள்
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved