ரூ.2.40 லட்சம் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையில் துவங்குகின்ற ஸ்போர்ட்டிவ் 2025 டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 மோட்டார்சைகிளில் கூடுதலான வசதிகளுடன் புதிய நிறம் என சில முக்கிய மாற்றங்களை பெற்றதாக அமைந்துள்ளது.
குறிப்பாக, கீலெஸ் இக்னிஷன், லான்ச் கண்ட்ரோல் வசதியுடன் க்ரூஸ் கண்ட்ரோல், பை டைரக்ஷனல் க்விக் ஷிஃப்டர், வெளிப்படையான கிளட்ச் கவர், நக்கிள் கார்டுகள் மற்றும் தொடர்ச்சியான டர்ன் இன்டிகேட்டர், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள சிவப்பு நிறம் போன்றவை 2025 அப்பாச்சி ஆர்டிஆர் 310ல் கவனிக்க வேண்டியவை ஆகும்.
தொடர்ந்து அடிப்படையான டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்று OBD-2B ஆதரவுடன் கூடிய 313cc லிக்யூடு கூல்டு எஞ்சின் 35.6hp மற்றும் 28.7Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
துப்பிக்கப்பட்ட 5-இன்ச் TFT கிளஸ்டரை கொண்டுள்ள இந்த பைக்கில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை அனுகும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உள்ளது.
BTO (Built To Order) மூலம் டைனமிக் கிட் வாயிலாக முழுமையாக அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் இரு பக்கத்திலும், காப்பர் பூசப்பட்ட சங்கிலி மற்றும் டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS) ஆகியவற்றைச் சேர்க்கிறது, இதன் ஒட்டுமொத்த விலை ரூ.18,000 ஆகும்.
டைனமிக் ப்ரோ கிட் சாவி இல்லாத இக்னிஷன், லாஞ்ச் கட்டுப்பாடு போன்ற ஏராளமான மின்னணு சாதனங்களைக் கொண்டு ரைடிங் மோடுகளை பெற்றதன் விலை ரூ.28,000 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.
TVS Apache RTR 310 price
- Base Variant: ₹ 2,39,990 (Black)
- Top Variant: ₹2,57,000 (Red & Yellow)
- BTO Dynamic Kit ₹2,75,000
- BTO Dynamic Pro Kit ₹2,85,000
- BTO Dynamic Kit+ Dynamic Pro kit ₹ 3,03,000
அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக சலுகை மூலம் ஆரம்ப நிலை Base & Top வேரியண்ட் ரூ.10,000 வரை விலை குறைவாக கிடைக்கின்றது. டிவிஎஸ் ரேசிங்கின் உலகளாவிய பாரம்பரியத்தை நினைவுப்படுத்தும் வகையில், உயர்நிலை BTO வேரியண்டில் ரேஸ் ரெப்ளிகா செபாங் ப்ளூ நிறம் கிடைக்க உள்ளது.